இந்தியாவில் ஸ்போர்ட்டிவ் இருசக்கர வாகன சந்தையின் ஆரம்பமாக உள்ள 150-160cc உள்ள பிரிவில் ஹோண்டா நிறுவனம் இரண்டு பைக் மாடல்களை விற்பனை செய்து வரும் நிலையில் இரண்டும் ஒரே என்ஜினை பயன்படுத்தி குடும்பங்களுக்கான பயன்பாடுக்கு ஏற்றதாக யூனிகார்ன் மற்றும் ஸ்போர்ட்டிவ் லுக்கில் உள்ள SP160 என இரு மாடல்களின் என்ஜின் விபரம், மைலேஜ், சிறப்பு அம்சங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளளலாம்.
இந்த மாடல்களுக்கு போட்டியாக ஹீரோ, பஜாஜ் யமஹா மற்றும் சுசூகி உள்ளிட்ட நிறுவனங்களும் பைக்குகளை விற்பனை செய்து வருகின்றன. முதலில் ஃபேமிலி லுக்கில் தொடர்ந்து இந்தியாவின் சிறப்பான 160சிசி பைக்காக உள்ள யூனிகார்ன் 160 பற்றி அறியலாம்.
மிகவும் அக்ரோஷமான தோற்ற அமைப்பில் இல்லாமல் வழக்கமாக கிடைக்கின்ற கம்யூட்டர் மாடலை போலவே அமைந்திருக்கின்ற ஹோண்டாவின் யூனிகார்ன் 160 விலை ரூ.1,09,200 பைக்கில் HET (Honda Eco Technology) நுட்பத்தினை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள 162.71cc என்ஜின் அதிகபட்சமாக 7,500rpm-ல் 12.73 bhp பவர், 14 NM டார்க் ஆனது 5500rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளதால் இதன் மைலேஜ் லிட்டருக்கு 48-50 கிமீ வழங்குகின்றது.
இரு பக்கத்திலும் 18 அங்குல டயர் பெற்று முன்புறத்தில் 240 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் கொண்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பெற்றுள்ள யூனிகானில் கிரே, ப்ளூ, ரெட் மெட்டாலிக் மற்றும் கிரே என நான்கு நிறங்களை கொண்டுள்ளது.
2024 ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்கின் ஆன்ரோடு விலை ரூ.1,33,785 ஆகும்.
விற்பனையில் உள்ள எஸ்பி125 பைக்கின் டிசைனை பகிர்ந்து கொண்டு ரூ.1,17,950 முதல் ரூ.1,22,350 விலையில் கிடைக்கின்ற SP160 பைக் மாடலில் சிங்கிள் டிஸ்க் மற்றும் டூயல் டிஸ்க் என இரு வேரியண்டுகளை பெற்றுள்ளது.
HET (Honda Eco Technology) நுட்பத்தினை பெற்று 162.71cc என்ஜின் அதிகபட்சமாக 7,500rpm-ல் 13.5 hp பவர், 14.6 NM டார்க் ஆனது 5500rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. சேஸ் மற்றும் என்ஜின் யூனிகாரனை பைக்கில் இருந்து பெற்று SP160 மைலேஜ் 45-48 கிமீ வெளிப்படுத்துகின்றது.
17 அங்குல வீல் பெற்று இருபக்க டயர்களிலும் 276 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 220 மிமீ டிஸ்க் மற்றும் 130 மிமீ டிரம் பிரேக் பெற்றதாக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உள்ளது. மற்றபடி,, எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் கிளஸ்ட்டர் உள்ளிட்ட வசதிகளை பெற்றுள்ளது.
2024 ஹோண்டா SP160 பைக்கின் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை ரூ.1,42,185 முதல் 1,48,673 ஆகும்.
யூனிகாரன் 160 பைக்கிற்கு போட்டியாக நேரடி மாடல் இல்லை என்றாலும் SP160 மற்றும் யூனிகானுக்கு போட்டியாக உள்ள பல்சர் 160 பைக்குகள், எக்ஸ்ட்ரீம் 160 மற்றும் அப்பாச்சி 160 போன்றவற்றில் பல்வேறு நவீன வசதிகள் மற்றும் ரைடிங் மோடுகள், கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெற்ற மாடலகள் மாற்றாக உள்ளன.
எஸ்பி 160 மாடலை விட யூனிகார்ன் சிறந்த ரீசேல் மதிப்பு மற்றும் அதிகப்படியான விற்பனை எண்ணிக்கையை மாதந்தோறும் பதிவு செய்து வருகின்றது.
மேலும் படிக்க – ஹோண்டா எஸ்பி 160 போட்டியாளர்கள் ஒப்பீடு