Automobile Tamilan

50 லட்சம் மாருதி ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை

உலகயளவில் மாருதி சுசூகி ஸ்விஃப்ட் கார் 50 லட்சம் என்ற புதிய விற்பனை மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது. மொத்த விற்பனையில் இந்தியாவின் பங்கு மட்டும் 54 % ஆகும்.

maruti-swift

உலகயளவில் இந்திய , ஜப்பான் , சீனா , பாகிஸ்தான் , ஹங்கேரி , மலேசியா மற்றும் தாயல்லாந்து என மொத்தம் 7 நாடுகளில் தயாரிக்கப்பட்டு 140க்கு மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படும் ஸ்விஃப்ட் காரின் மொத்த விற்பனையில் 27 லட்சம் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஸ்விஃப்ட் சந்தை சதவீதம்

2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விற்பனைக்கு வந்த ஸ்விஃப்ட் கடந்த 11 ஆண்டுகள் 5 மாதங்களில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்திய மட்டுமல்லாமல் பல வெளிநாடுகளிலும் ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்கள் மிக பெரிய வெற்றியை பெற்று உள்ளன.

மேலும் படிங்க ; புதிய தலைமுறை ஸ்விஃப்ட் கார் படங்கள்

இந்தியாவில் 1.2 லிட்டர் பெடரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என இருவிதமான என்ஜின் ஆப்ஷனில் உள்ளது. ஐரோப்பா நாடுகளில் ஸ்போர்ட்ஸ் மற்றும் 4WD  டிரைவ் ஆப்ஷனில் விற்னை செய்யப்படுகின்றது. அடுத்த தலைமுறை  மாருதி ஸ்விஃப்ட் ஸ்விஃப்ட் 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திய சந்தைக்கு வரவுள்ளது.

Exit mobile version