Automobile Tamilan

350cc+ மோட்டார்சைக்கிள்களுக்கு 40 % ஜிஎஸ்டி வரி.?

2025 Royal Enfield meteor 350 bike

தற்பொழுது நடைமுறையில் இரு சக்கர வாகனங்களுக்கு 28% ஜிஎஸ்டி மற்றும் 3% செஸ் வரி ஆனது 350சிசிக்கு மேல் உள்ள பைக்குகளுக்கு வசூலிக்கப்படும் நிலையில், வரும் மாதங்களில் 350சிசிக்கு குறைந்த திறன் பெற்ற அனைத்து பைக்குகளுக்கும் 18% ஜிஎஸ்டி வரி மற்றும் அதற்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு 40 % வரி விதக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற 97% இரு சக்கர வாகனங்கள் 350சிசி எஞ்சின் பிரிவுக்குள் அடங்குவதனால் பெரும்பாலான பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் 18 % ஜிஎஸ்டி வரிக்குள் கிடைக்கலாம், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 350cc வரிசைகளில் உள்ள பைக்குகள் 346cc எஞ்சின் பெறுவதால் 18% ஜிஎஸ்டி வரியை பெற வாய்ப்புள்ளது. ஹோண்டாவின் ஹைனெஸ், ஜாவா,  பைக்குகளும் 350ccக்கு குறைந்த எஞ்சின்களை பெற்றள்ளது.

குறிப்பாக, 350ccக்கு மேல் எஞ்சின் பெற்ற மற்ற ராயல் என்ஃபீல்டு பைக்குகள், பஜாஜின் கேடிஎம், டிரையம்ப், ஹீரோ ஹார்லி-டேவிட்சன் உள்ளிட்ட நிறுவனங்களின் மாடல்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும்.

350cc க்கும் குறைவான பிரிவு உள்நாட்டு இரு சக்கர வாகன சந்தையில் 97% ஆகும். இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (SIAM) தரவுகளின்படி, FY25 இல், 350cc க்கும் குறைவான மோட்டார் சைக்கிள் பிரிவு 5% அதிகரித்து 12,079,779 ஆக உயர்ந்துள்ளது, இது FY24 இல் 11,522,954 ஆக இருந்தது.

இந்தியாவில் விற்கப்படும் அனைத்து ஸ்கூட்டர்களும் 350cc க்கும் குறைவான எஞ்சின்களைக் கொண்டுள்ளன. இந்தப் பிரிவு 17% அதிகரித்து FY25 இல் 6,853,214 ஆக உயர்ந்தது, இது FY24 இல் விற்கப்பட்ட 5,838,325 ஆக இருந்தது.

பைக்குகள் மட்டுமல்லாமல் குறைந்த திறன் பெற்ற கார்களுக்கும் ஜிஎஸ்டி வரி மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளதால், முக்கிய அறிவிப்பு வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version