புதிய ஸ்விஃப்ட் கார் பலேனோ தளத்தில்

புதிய தலைமுறை மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் கார் பலேனோ பிரிமியம் கார் தளத்தில் உருவாக உள்ளது. புதிய ஸ்விஃபட் கார் வரும் 2017ம் ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ளது.
ஸ்விஃப்ட் கார்

YSD என்ற குறீயிட்டு பெயரில் உருவாக தொடங்கியுள்ள புதிய ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் கார் மிகவும் இலகு எடையில் தரமான பாகங்களுடன் சிறப்பான பாதுகாப்பு வசதிகளுடன் இந்திய கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு ஏற்ற வகையில் இருக்கும்.

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரில் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் என்ஜின் ஆப்ஷனுடனும் , 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடனும் வரலாம். மேலும் டீசல் என்ஜின் ஆப்ஷனில் தற்பொழுது விற்பனையில் உள்ள 1.3 லிட்டர் DDIS என்ஜினில் SHVS  ஹைபிரிட் நுட்பத்துடன் வரும் அல்லது 1.5 லிட்டர் டீசல் SHVS  ஹைபிரிட் என்ஜினுடன் வரவாய்ப்புகள் உள்ளது.

தற்பொழுது விற்பனைக்கு வரவுள்ள புதிய மாருதி பலேனோ கார் ஸ்விஃப்ட் காரை விட பெரிதாக இருந்தாலும் எடையில் 100 கிலோ குறைவான மாடலாகும். எனவே புதிய ஸ்விஃப்ட் எடை 100 கிலோவுக்கு மேல் குறையும். எரிபொருள் சிக்கனம் அதிகரிக்கப்பட்டிருக்கும்.

2017 முதல் இந்திய பாதுகாப்பு தர விதிகளுக்கு உட்பட்ட வாகனங்கள்தான் விற்பனைக்கு வரவுள்ளதால் அதற்க்கு இணையான பாதுகாப்பு அம்சங்களுடன் முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் , ஏபிஎஸ் , இபிடி போன்ற அம்சங்கள் நிரந்தரமாக இருக்கும். பதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரின் கான்செப்ட் மாடல் வரும் டோக்கியோ மோட்டார் ஷோவில் பார்வைக்கு வரலாம்.

New Maruti Suzuki Swift based on Baleno platform

Exit mobile version