சிறிய டீசல் கார் உற்பத்தியை நிறுத்துவதாக டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு

ஏப்ரல் 2020 முதல் இந்தியாவில் பிஎஸ் 6 மாசு கட்டுப்பாடு விதிகள் நடைமுறைக்கு வருவதனால் சிறிய டீசல் கார் உற்பத்தியை கைவிடுவதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மாருதியை தொடர்ந்து டாடா இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

பொதுவாக பிஎஸ் 6 நடைமுறைக்கு வரும் போது 1.5 லிட்டருக்கு குறைவான டீசல் என்ஜின் பெற்ற கார்கள் விலை கடுமையாக உயரும் என்பதனால் வாடிக்கையாளர்கள் டீசல் என்ஜினை தேர்ந்தெடுக்க தயங்குவார்கள் என்பதனால் முன்னணி நிறுவனங்கள் டீசல் என்ஜின் பெற்ற சிறிய கார்களை கைவிட உள்ளன.

சிறிய டீசல் என்ஜின் கார்

சமீபத்தில் நாட்டின் முதன்மையான கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனம், 1.3 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட கார்களையும், பெரும்பாலான தனது மாடல்களில் பெட்ரோல் என்ஜின் தவிர சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் மட்டும் அறிமுகம் செய்யப்படும் ஃனவும், குறிப்பிட்ட ஒரு சில மாடல்களில் மட்டும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வாடிக்கயாளர்களின் தேவைக்கு ஏற்ப விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது.

ஆனால் சமீபத்தில் ஃபோர்டு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் டீசல் என்ஜின் உற்பத்தி செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளது. இந்நிறுவனம் 1.5 லிட்டருக்கு குறைவான டீசல் என்ஜின்களை தயாரிப்பதில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தற்போது டாடா நிறுவனம், இந்தியாவின் தேசிய என்ஜின் என அறியப்படுகின்ற ஃபியட் நிறுவன 1.3 லிட்டர் டீசல் என்ஜின் பிஎஸ் 6 நடைமுறைக்கு மாற்றும் திட்டத்தை ஃபியட் கைவிட்டுள்ளதால், தனது போல்ட் மற்றும் ஜெஸ்ட் கார்களில் இந்த என்ஜினை நீக்குவதுடன், தனது சொந்த ரெவோடார்க் என்ஜின்களில் உள்ள 1.0 லிட்டர், 1.05 லிட்டர் என்ஜின்களை பிஎஸ் 6 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு மாற்றப்படும் போது தொழில்நுட்ப மாற்றங்களுக்கு கூடுதல் செலவு அதிகரிக்கும் என்பதனால் டீசல் கார்களின் விலை கடுமையாக உயரும் இதன் காராணமாக சிறிய டீசல் காரின் உற்பத்தியை கைவிட உள்ளதாக பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் டாடா மோட்டார்ஸ் நிறுவன பயணிகள் வாகன பிரிவு தலைவர் Mayank Pareek குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தொடக்க நிலை வாகன சந்தையில் வாடிக்கையாளர்களின் 80 சதவீத தேர்வு பெட்ரோல் மாடல்களாக உள்ள நிலையில், டீசல் கார்கள் மீதான முதலீடு பெரிய அளவில் பயன் தராத ஒன்றாக விளங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்நிறுவனம் ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் டீசல் என்ஜினை ஹாரியர் காரில் பயன்படுத்தி வருகின்றது. மேலும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் என இரண்டினை மட்டும் பாரத் ஸ்டேஜ் 6 நடைமுறைக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது.

Share
Published by
automobiletamilan

Recent Posts

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன் விலை எவ்வளவு ?

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 10 கோடி பைக்குகளின் உற்பத்தியை கொண்டாடும் வகையில் வெளியிட்டுள்ள எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன்…

2021/02/26

இந்தியாவில் பிஎஸ்6 கவாஸாகி நின்ஜா 300 அறிமுகம்

அடுத்த சில நாட்களில் விலை அறிவிக்கப்பட உள்ள புதிய 2021 கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால்…

2021/02/25

6 & 7 இருக்கையில் ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி டீசர் வெளியானது

5 இருக்கை கிரெட்டா காரின் அடிப்படையிலான 6 மற்றும் 7 இருக்கை பெற்றதாக ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி என்ற பெயரில்…

2021/02/24

ரூ.5.73 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி ஸ்விஃப்ட் விற்பனைக்கு வெளியானது

இரு வண்ண கலவை நிறத்தை பெற்ற புதிய 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.5.73 லட்சம் முதல் அதிகபட்சமாக…

2021/02/24

சோதனை ஓட்டத்தில் டொயோட்டா RAV4 எஸ்யூவி., இந்தியா வருகையா.?

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா RAV4 க்ராஸ்ஓவர் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற…

2021/02/24

பியாஜியோ அபே எலக்ட்ரிக் ஆட்டோ FX விலை ரூ.2.84 லட்சம்

பியாஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அபே E-City FX, E-Xtra FX (Fixed Battery) எலக்ட்ரிக் ஆட்டோ பயணிகள் மற்றும் சுமை…

2021/02/24