Site icon Automobile Tamilan

2017 ஸ்கோடா ரேபிட் கார் விற்பனைக்கு வெளியானது

மேம்படுத்தப்பட்ட புதிய ஸ்கோடா ரேபிட் கார் ரூ.8.34 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட கூடுதலான ஆற்றல் மற்றும் பல நவீன வசதிகளை பெற்ற மாடலாக ரேபிட் கார் வந்துள்ளது.

இந்தியாவில் 2011  ஆம் ஆண்டில் விற்பனைக்கு வந்த ரேபிட் கார் பெரிதான மாற்றங்களுடன் தற்பொழுது வெளியாகியுள்ளது. சூப்பர்ப் மற்றும் ஆக்டாவியா கார்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள கிரிஸ்ட்லைன் வடிவ தாத்பரியங்களை பெற்றுள்ள ரேபிட் காரின் தோற்றத்தில் புதிய கிரில் ,பம்பர் , புராஜெக்டர் முகப்பு விளக்குகள் ,  எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் , பானெட் போன்றவற்றை பெற்றுள்ளது.

உட்புறத்தில் சிறப்பான இடவசதியை வழங்கும் வகையில் அமைந்துள்ள ரேபிட் காரின் டாப் வேரியன்டில் 6.5 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் கூடிய மிரர்லிங் ஆதரவு , ஜிபிஎஸ் நேவிகேஷன் ,மழையை உனர்ந்து செயல்படும் வைப்பர்கள் , ஹீல் ஹோல்ட் அசிஸ்ட் , க்ரூஸ் கட்டுப்பாடு என பலவற்றை பெற்றுள்ளது. ஏபிஎஸ், முன்பக்க இரு காற்றுப்பைகள் அனைத்து வேரியண்டிலும் நடுத்தர வேரியன்டில் பார்க்கிங் சென்சார் மற்றும் இஎஸ்பி போன்றவை உள்ளது.

2017 ரேபிட் கார் எஞ்சின்

முந்தைய பெட்ரோல் 1.6 லிட்டர் எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லாமல் அதிகபட்சமாக 105 hp பவரையும், 153Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. ரேபிட் பெட்ரோல் காரின் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 15.41 கிலோமீட்டர் (MT) மற்றும் 14.84 கிலோமீட்டர் (DSG) ஆகும்.

போக்ஸ்வேகன் எமியோ காரில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே 1.5 லிட்டர் டீசல் பொருத்தப்பட்டு எஞ்சின் 110 hp ஆற்றல், 250 Nm டார்க் வெளிப்படுத்தும்.  இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. ரேபிட் டீசல் காரின் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 21.13 கிலோமீட்டர் (MT) மற்றும் 21.72 கிலோமீட்டர் (DSG) ஆகும்.

ஸ்கோடா ரேபிட் பெட்ரோல் விலை

ஸ்கோடா ரேபிட் டீசல் விலை

Exit mobile version