Site icon Automobile Tamil

2019 ஹூண்டாய் சாண்ட்ரோ கார்கள் இயான் கார்களுக்கு மாற்றாக இருக்காது

ஹூண்டாய் சாண்ட்ரோ கார்கள் கடந்த 23ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் இந்த கார்கள், ஹூண்டாய் இயான் கார்களுக்கு மாற்றாக இருக்கும் என்ற கருத்துகள் எழுந்தது. இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஹூண்டாய் நிறுவனம், சாண்ட்ரோ கார்கள் இயான் கார்களுக்கு மாற்றாக இருக்காது என்று தெரிவித்துள்ளது.

இயான் கார்கள் கடந்த 2011ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார்கள் அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரை சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. வரும் 2021ம் ஆண்டில் புதிய தலைமுறைக்கான இயான் கார்களை அறிமுகம் செய்ய ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த கார்கள் தற்போது உள்ள இயான் காரை போன்று இல்லாமால், சில புதிய மாற்றங்களுடன் வெளி வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய காரில் உள்அலங்கார டிசைன்களிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. இது மட்டுமின்றி CNG வகை மற்றும் ஆப்சனலாக AMT கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

இயான் கார்கள் தற்போது இரண்டு வகையான பெட்ரோல் ஆப்சன்களில் கிடைக்கிறது. அதாவது 0.8 லிட்டர் இன்ஜின்களுடன் 55bhp மற்றும் 75 Nm டார்க்யூ கொண்டிருக்கும். மற்றொரு வகை 1.0 லிட்டர் கப்பா யூனிட்களுடன் 68bhp மற்றும் 94Nm டார்க்யூ கொண்டதாக இருக்கும்.

இந்த இரண்டு இன்ஜின்களும் 5-ஸ்பீட் மெனுவல் கியார் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும். தற்போது இயான் கார்கள், மாருதி ஆல்டோ 800, மாருதி ஆல்டோ கே 10, ரெனால்ட் குவிட் மற்றும் டட்சன்ஸ் ரெடி-கோ கார்களுக்கு போட்டியாக இருந்து வருகிறது.

Exit mobile version