டைம்லர் இந்தியா வர்த்தக வாகனங்கள் (Daimler India Commercial Vehicles – DICV) பிரிவு 2,00,000 வாகனங்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. இந்திய சந்தைக்கு என பிரத்தியேகமாக பாரத் பென்ஸ் பெயரில் டிரக்குகள் மற்றும் பேருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றது.
கடந்த CY 2022 ஆம் ஆண்டில் டைம்லர் இந்தியா 37 சதவீத வருவாய் வளர்ச்சி மற்றும் 25 சதவீத விற்பனை வளர்ச்சியை வெற்றிகரமாக துவங்கியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் செயல்படத் தொடங்கியதில் இருந்து பாரத் பென்ஸ் பிராண்டிற்கு மிகச் சிறந்த 2022 காலண்டர் ஆண்டில், DICV உள்நாட்டில் 18,470 யூனிட்கள் விற்பனை மற்றும் 11,000 யூனிட்டுகளுக்கு மேல் ஏற்றுமதி செய்துள்ளது.
இந்நிறுவனத்தின் ஒரகடம் உற்பத்தி ஆலையில் 200,000 வாகனங்கள் (உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி உட்பட) மற்றும் 200,000 டிரான்ஸ்மிஷன்கள் உற்பத்தி செய்து புதிய மைல்கல்லையும் கடந்துள்ளது.
பாரத்பென்ஸ் கனரக டிரக்குகள் கட்டுமான மற்றும் சுரங்கப் பிரிவில் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது. 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பாரத் பென்ஸ் 3532CM மைனிங் டிப்பர், 2832CM மைனிங் டிப்பர், 5532 டிப்-டிரெய்லர், குறிப்பாக 6×4 மற்றும் 10×4 கட்டுமான பயன்பாடிற்கும் மற்றும் 10×4 வரையிலான அதிக செயல்திறன் மிக்க கனரக டிரக்குகள் கொண்ட போர்ட்ஃபோலியோவை பெற்றுள்ளது.
பாரத்பென்ஸ் 6 சக்கர 13T நடுத்தர டிரக்குகள் முதல் 22 சக்கர 55T டிரக்குகள் (டிப் டிரெய்லர்கள்) வரை பல்வேறு தயாரிப்புகளை வழங்குகிறது. இந்த டிரக்குகள் கட்டுமானம், சுரங்கம், நீர்ப்பாசனம்/சுரங்கம் மற்றும் நகரத்திற்குள் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு விரிவான பயன்பாடுகளுக்கு ஏற்றதாக உள்ளது.
ஒரகடம் ஆலையில் நான்கு டிரக் பிராண்டுகளை DICV உற்பத்தி செய்கிறது. அவை பாரத் பென்ஸ் (இந்திய பிராண்ட்), மெர்சிடிஸ் பென்ஸ் டிரக், ஃப்ரைட்லைனர் மற்றும் மிட்சுபிஷி ஃபுசோ டிரக்குகள் ஆகும்.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…
ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…
கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…
ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…
துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…