Automobile Tamil

ஃபியட் கிறைஸலர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

இந்தியாவில் செயல்பட்டு வரும் ஃபியட் கிறைஸலர் ராஞ்சகவுன் தொழிற்சாலையில் 1500க்கு மேற்பட்ட நபர்கள பணியமர்த்த ஃபியட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த ஆலையில் 280 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.

ஃபியட் கிறைஸலர்

புனே அருகில் உள்ள  ராஞ்சகவுன் பகுதியில் அமைந்துள்ள ஃபியட் நிறுவனத்தில் கடந்த  இரண்டு ஆண்டுகளில் 280 மில்லியன் டாலர்களை முதலீடு வரை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் இந்த ஆலையின் வாயிலாக ஆண்டிற்கு 1,60,000 வாகனங்களை உற்பத்திசெய்ய இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்னதாக ஃபியட் நிறுவனத்தின் ஆலையில் இந்தியாவில் ஜீப் பிராண்டின் முதல் காம்பஸ் எஸ்யூவி மாடல் உற்பத்தி துவங்கியுள்ள நிலையில் இந்தியா தவிர பல்வேறு நாடுகளுக்கு காம்பஸ் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதால் ஆலையின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் நோக்கில் இந்த வருடத்தின் இறுதிக்குள் ஆலையின் மொத்த உற்பத்தியில் 80 சதவிகிதமாக எட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது.

தற்போது இந்த ஆலையில் 1700 பணியாளர்கள் உள்ள நிலையில் கூடுதலாக உற்பத்தி தொடங்கப்பட்டுள்ள ஜீப் பிராண்டு மற்றும் வாகன உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் திட்டங்களை கையிலெடுத்துள்ளாதால் வருட இறுதிக்குள் 1500 க்கு மேற்பட்ட பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளது.

இந்த ஆலையில் ஜீப் பிராண்டு தவிர முன்பு ஃபியட் நிறுவனத்தின் புன்ட்டோ மற்றும் லீனியா போன்ற கார்களும் உற்பத்தி செய்யப்படுகின்றது.

Exit mobile version