இந்தியாவின் புதிய ஜிஎஸ்டி 2.0 வரி குறைப்பினால் ஃபோர்ஸ் மோட்டார்சின் டிராக்ஸ், டிராவலர், மோனோபஸ், அர்பேனியா மற்றும் கூர்கா எஸ்யூவி ஆகியவற்றின் விலை ரூ.92,900 முதல் அதிகபட்சமாக ரூ.6.81 லட்சம் குறைய உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தார் மாடலுக்கு சவால் விடுக்கின்ற கூர்கா எஸ்யூவி மாடலின் விலை அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரை குறைக்கப்பட உள்ளது. அர்பேனியா வேனின் விலை ரூ.2.47 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.6.81 லட்சம் வரை குறைக்கப்பட உள்ளது.
வேன் தயாரிப்பின் மூலம் முன்னணியில் உள்ள ஃபோர்ஸ் நிறுவனத்தின் ஆம்புலன்ஸ் சார்ந்த பயண்பாடு மற்றும் போக்குவரத்துக்கான டிராவலர் போன்றவை மிகவும் பிரசத்தி பெற்றதாக உள்ளது.
Product | Reduction in MRP (₹) |
---|---|
Traveller | From ₹1.18L To ₹4.52L |
Trax | From ₹2.54L To ₹3.21L |
Monobus | From ₹2.25L To ₹2.66L |
Urbania | From ₹2.47L To ₹6.81L |
Gurkha | From ₹92.9K To ₹1.25L |
அறிவிக்கப்பட்டுள்ள விலை குறைப்பு வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.