Automobile Tamilan

மீண்டும் இந்தியாவில் ஃபோர்டின் காம்பேக்ட் எஸ்யூவி ?

ford patent suv

மீண்டும் ஃபோர்டு இந்திய சந்தையில் தனது மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர தயாராகியுள்ள நிலையில் காம்பேக்ட் எஸ்யூவி டிசைனுக்கு காப்புரிமை பெற்றுள்ளது. ஏற்கனவே எண்டோவர், மஸ்டாங் Mach-E உள்ளிட்ட மாடல்கள் தொடர்பான காப்புரிமை , பெயருக்கான வர்த்தக முத்திரையை பதிவு செய்துள்ளது.

சென்னையில் அமைந்துள்ள ஃபோர்டு ஆலையின் விற்பனை முடிவை கைவிட்டதை தொடர்ந்து எப்பொழுது ஃபோர்டு மீண்டும் சந்தையில் நுழையும் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்பொழுது புதிய டிசைன் ஒன்றை காப்புரிமை பெற்றுள்ளது.

இந்த மாடல் ஏற்கனவே மஹிந்திரா மற்றும் ஃபோர்டு கூட்டணியில் உருவாக்கப்படுகின்ற எக்ஸ்யூவி 700 அடிப்படையிலான மாடல் என்று 2021 ஆண்டு கூறப்பட்டு வந்த நிலையில் இந்திய சந்தையிலிருந்து வெளியேறியது.

மீண்டும் சந்தையில் ஃபோர்டு எண்டோவர், ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட மாடல்களுடன் ரூ.10 முதல் ரூ.20 லட்சம் விலைக்குகள் ஒரு புதிய எஸ்யூவி வெளியிடலாம்  என எதிர்பார்க்கின்றோம். தற்பொழுது வரை ஃபோர்டு இந்தியா எந்தவொரு அதிகாரப்பூர்வ திரும்ப இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரும் மாடல்கள் மற்றும் தேதி உள்ளிட்ட தகவலை உறுதிப்படுத்தவில்லை.

Exit mobile version