Automobile Tamilan

இந்தியாவிலிருந்து ஜிஎம் செவர்லே வெளியேறுகின்றதா..?

அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் செவர்லே இந்தியா பிரிவு தனது செயல்பாட்டை இந்திய சந்தையில் நிறுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

செவர்லே இந்தியா

செவர்லே நிறுவனத்தின் குஜராத் ஆலை தொழிலாளர்கள் பிரச்சனையை தொடர்ந்து ஹலால் ஆலையை மூடிவிட்டு புனே அருகில் அமைந்திருந்த தாலேகன் ஆலையில் கார்களை உற்பத்தி செய்து வந்த நிலையில் சில மாதங்களாகவே விற்பனையில் மிகவும் பின் தங்கியுள்ள ஜிஎம் இந்திய சந்தையிலிருந்து வெளியேற திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கடந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட புதிய பீட் மற்றும் எசென்சியா செடான் போன் கார்களை இந்திய சாலைகளில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தி வருகின்ற நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது உறுதிப்படுத்தப்படாத யூக தகவலே என்பதே உண்மை, ஆனால் ஜிஎம் ஆலையில் இந்திய சந்தைக்கான க்ரூஸ் , செயில் போன்ற மாடல்களின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும் உற்பத்தி செய்யப்படுகின்ற மாடல்கள் இடதுபுற ஸ்டீயரிங் வீல் பெற்றுள்ள ஏற்றுமதி கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றதாம். சமீபத்தில் செவர்லே நிறுவனத்தின் சீன கூட்டணி தயாரிப்பாளரான எஸ்ஐஏசி நிறுவனம் சார்பாக எம்ஜி மோட்டார்ஸ் குஜராத்தில் அமைந்துள்ள ஜிஎம் ஆலையில் வாகனங்களை உற்பத்தி செய்யும் நோக்கில் ஆலையை கையகப்படுத்த உள்ளது.

இதுகுறித்தான அதிகார்வப்பூர்வ அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளிவரலாம்.. இணைந்திருங்கள் ஆட்டோமொபைல் தமிழன் தளத்துடன்….

Exit mobile version