Automobile Tamilan

ஹோண்டா கார்களுக்கு ரூ.95,500 வரை ஜிஎஸ்டி பலன்கள்..!

2025 Honda Elevate

இந்தியாவின் ஹோண்டா கார்ஸ் நிறுவனம் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து அமேஸ் முதல் எலிவேட் , சிட்டி போன்ற கார்களுக்கு ரூ.57,500 முதல் அதிகபட்சமாக ரூ.95,500 வரை விலை குறைக்கப்பட உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.

குறிப்பாக இந்நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை அமேஸ் காருக்கு அதிகபட்ச விலை டாப் வேரியண்டுக்கு ரூ.72,800, புதிய அமேஸ் செடானுக்கு ரூ.95,500 அதிகபட்சமாக குறைய உள்ளது. அடுத்து பிரசத்தி பெற்ற சிட்டி காருக்கு ரூ.57,500 மற்றும் எலிவேட் எஸ்யூவிக்கு ரூ.58,400 வரை குறைய உள்ளது.

அட்டவனையில் விபரம் கீழே

Model Estimated Price Reduction (effective 22nd Sept 2025)
Honda Amaze 2nd Gen Up to ₹72,800
Honda Amaze 3rd Gen Up to ₹95,500
Honda Elevate Up to ₹58,400
Honda City Up to ₹57,500

 

விலை குறைப்பு வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்தியாவில் ஜிஎஸ்டி 2.0 வரி சீர் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் சிறிய கார்களுக்கு 18 % மற்றவைக்கு 40 % ஆக வரி மாற்றப்பட்டுள்ளது.

Exit mobile version