Automobile Tamilan

1 லட்சம் விற்பனை இலக்கை கடந்த ஹோண்டா எலிவேட் எஸ்யூவி.!

honda elevate suv

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்ற எலிவேட் காரை ஹோண்டா இந்தியா மட்டுமல்லாமல் ஜப்பான், தென் ஆப்ரிக்கா, நேபால் மற்றும் பூடான் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், இந்தியாவில் சுமார் 53,326 யூனிட்டுகளும், மற்ற நாடுகளில்  47,653 யூனிட்டுகளையும் விற்பனை செய்துள்ளது. கடந்த 2023 செப்டம்பரில் வெளியிடப்பட்ட எலிவேட் இந்தியாவில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தின் தபுகாரா பகுதியில் தயாரிக்கப்பட்டு முதன்முறையாக ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட முதல் ஹோண்டா காராகும்.

மேலும் ஹோண்டா தனது அறிக்கையில் விற்பனை செய்யப்பட்டு 1 லட்சம் எலிவேட் என்னிக்கையில் 53% டாப் ZX வேரியண்ட்டை தேர்ந்தெடுத்துள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக ADAS பாதுகாப்பு தொகுப்பு உள்ளது.

மேலும், ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையில் 79 % சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட மாடலாகவும், 22 % பேர் முதல்முறையாக கார் வாங்குபவர்களாகவும், 43 % பேர் இரண்டாவது மாடலாக தேர்ந்தெடுத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.

அடுத்து நிறங்கள் வாரியாக விபரம் பின்வருமாறு அமைந்துள்ளது.

Exit mobile version