ஹோண்டா சிட்டி, ஜாஸ் 4 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது – Global NCAP

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற காரர்களுக்கு குளோபல் என்சிஏபி மையம் மூலம் Safer Cars For India திட்டத்தின் கீழ் கிராஷ் டெஸ்ட் சோதனை செய்யப்பட்ட நிலையில் ஹோண்டா சிட்டி, ஜாஸ் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஹோண்டா சிட்டி GNCAP

சிட்டி காரின் வயது வந்தோருக்கான பாதுகாப்புச் சோதனையில் 4-நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றது. 17 புள்ளிகளுக்கு 12.03 புள்ளிகளைப் பெற்றது.  குழந்தைகளுக்கான பாதுகாப்புச் சோதனையில் 49 புள்ளிகளுக்கு 38.27 மதிப்பெண்களைப் சிறப்பாகச் செயல்பட்டது. எனவே குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 4 நட்சத்திர மதிப்பீட்டை மட்டுமே பெற்றுள்ளது.

ஹோண்டா ஜாஸ் GNCAP

ஹோண்டா ஜாஸ் வயது வந்தோருக்கான பாதுகாப்புச் சோதனையில் 4-நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றது. 17 புள்ளிகளுக்கு 13.89  புள்ளிகளைப் பெற்றது. இருப்பினும்,  குழந்தைகளுக்கான பாதுகாப்புச் சோதனையில் 49 புள்ளிகளுக்கு 31.54 மதிப்பெண்களைப் பெற்றது. எனவே குழந்தைகளுக்கான பாதுகாப்பில் மூன்று நட்சத்திர மதிப்பீட்டை மட்டுமே பெற்றுள்ளது.

ஹோண்டா ஜாஸ் தாங்கும் திறன் கொண்ட நிலையான பாடிஷெல் உள்ளது. அதன் ஃபுளோர் பகுதியும் நிலையானதாக மதிப்பிடப்பட்டது.

 

This post was last modified on May 14, 2023 7:19 AM

Share