Automobile Tamilan

ரூ.18,887 வரை ஹோண்டா ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளுக்கு ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

honda sp125 Anniversary edition

ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா, ஷைன், எஸ்பி 125 முதல் சிபி 350 வரை உள்ள பைக் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு ரூ.5,672 முதல் அதிகபட்சமாக ரூ.18,887 வரை விலை குறைக்கப்பட உள்ளதாக அதிகாரப்பூரவ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

350cc க்கு குறைந்த திறன் பெற்ற அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும் 18 % ஆக ஜிஎஸ்டி 2.0 வரி சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் விலை குறைப்பு செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

Honda Scooters and bikes GST Cut list

கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் டாப் வேரியண்டினை அடிப்படையாக கொண்டு விலை குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாட்டின் முதன்மையான ஆக்டிவா 110 ஸ்கூட்டர் விலை ரூ.7,874 வரை குறைய உள்ளது. அடுத்து, டியோ 110 மாடலுக்கு ரூ.7,157 வரையும், ஆக்டிவா 125 மற்றும் டியோ 125 முறையே ரூ.8,259 அடுத்து ரூ.8,042 வரை குறைய உள்ளது.

Model Maximum GST Benefit
(ex-showroom Delhi)
Activa 110 Up to Rs 7,874
Dio 110 Up to Rs 7,157
Activa 125 Up to Rs 8,259
Dio 125 Up to Rs 8,042
Shine 100 Up to Rs 5,672
Shine 100 DX Up to Rs 6,256
Livo 110 Up to Rs 7,165
Shine 125 Up to Rs 7,443
SP125 Up to Rs 8,447
CB125 Hornet Up to Rs 9,229
Unicorn Up to Rs 9,948
SP160 Up to Rs 10,635
Hornet 2.0 Up to Rs 13,026
NX200 Up to Rs 13,978
CB350 H’ness Up to Rs 18,598
CB350RS Up to Rs 18,857
CB350 Up to Rs 18,887

பிரபலமான 125சிசி ஷைன் ரூ.7,443 வரையும், எஸ்பி 125 மாடல் ரூ.8,447 வரையும், சிபி 125 ஹார்னெட் விலை ரூ.9,229 வரையும், இந்நிறுவனத்தின் யூனிகார்ன் விலை ரூ. 9,948 ஆகவும் சிபி 350 வரை உள்ள மாடல்களுக்கு அதிகபட்சமாக ரூ.18,887 வரை குறைய உள்ளது.

Exit mobile version