Automobile Tamilan

பைக்கில் அதிக மைலேஜ் பெறுவது எப்படி – மைலேஜ் தகவல்

இருசக்கர வாகனங்களில் அதிக மைலேஜ் பெறுவது எப்படி ? பைக்கில் அதிக மைலேஜ் பெறுவதற்க்கு உண்டான சில அடிப்படை காரணங்கள் என்ன – மைலேஜ் தகவல் தெரிந்துகொள்ளலாம்.

சிறப்பான மைலேஜ் பெறுவதறுக்கு முதல் தொடக்கமே சரியான பைக்கினை தேர்ந்தெடுப்பதுதான். 100சிசி முதல் 110சிசி தொடக்க நிலை பைக்குகள் சிறப்பான மைலேஜ் தரவல்லதாகும். அதிக மைலேஜ் பெற செய்யவேண்டியவை என்ன .. செய்யக்கூடாதவை என்ன ?

செய்ய வேண்டியவை ;

  • முறையான கால இடைவெளியில் தயாரிப்பாளின் பரிந்துரைத்த கிமீ யில் அங்கிகரிக்கப்பட்ட சர்வீஸ் மையத்தில் சர்வீஸ் செய்யுங்கள்.
  • மிதமான வேகத்தில் தொடர்ந்து பயணிக்க வேண்டியது மைலேஜ் அதிகரிக்க மிகவும் அவசிமானதாகும்.
  • டயரின் காற்றுழுத்தம் சரியாக உள்ளதா என்பதனை வாரம் ஒரு முறை சோதியுங்கள்.
  • தயாரிப்பாளர் பரிந்துரைத்த தரமான எரிபொருளினை தேர்வு செய்யுங்கள்.
  • அதிக நேரம் போக்குவரத்து நெரிசலில் காத்திருந்தால் வண்டியை அணைத்து விடுங்கள்
hero splendor

செய்யக்கூடாதவை என்ன ;

  • கைகளுக்குள் கிளட்சினை வைக்காதிர்கள். ஆனால் நெரிசல் மிகுந்த சாலைகளில் தவிர்க்க முடியாத ஒன்றுதான்.
  • திடீர் வேகம்  , அதிக வேகம் , அவசரமான சடன் பிரேக் போன்றவற்றை முடிந்தவரை தவிர்ப்பது மிகவும் மைலேஜ் அதிகரிக்க காரணமாக இருக்கும்.
  • குறைவான கியிரில் என்ஜினை அதிகநேரம் இயக்காதீர்கள்.
  • பிரேக் பெடலில் எந்தநேரமும் கால் வைப்பதனை தவிருங்கள் .. நெரிசல் மிகுந்த சாலையை தவிர மற்றவற்றில் தவிர்த்திடுங்கள்.
  • கூடுதல் சுமைகள் வாகனத்திற்க்கு கூடுதலான வேலை தரும் என்பதனால் அவசியமற்ற துனைகருவிகள் மற்றும் பொருட்களை தவிர்த்திடுங்கள்.
  • பைக் நிற்கும் பொழுது அடிக்கடி ரைஸ் பண்ணாதிங்க..
  • தேய்மானம் அடைந்த டயர்களை மாற்றிவிடுங்கள்
  • என்ஜின் மற்றும் காற்று பில்டர்  போன்ற பகுதிகளில் தேவையற்ற எந்தவொரு பொருட்களையும் வைக்காதீர்கள்.
  •  என்ஜின் மேற்பகுதியை தூய்மையாக பராமரிப்பது மிகவும் அவசியமானதாக ஏர் கூல்டு என்ஜின் என்பதானால் காற்று மிக தாரளமாக என்ஜின் குளிர்விக்க வேண்டும்.

மேலும் படிக்க ; நிறுவனங்கள் தரும் மைலேஜ் என்பது ஏமாற்று வேலையா ?

 

கவனியுங்க….

உங்களை நீங்களே கவனித்து வாகனம் எவ்வாறு இயக்குகின்றோம் .. எங்கே தவறு செய்கின்றோம் என்பதனை கூர்ந்து கவனித்து செயல்படுங்கள்…அது உங்களுக்கும் உங்கள் பணத்திற்க்கும் பாதுகாப்பானதாக இருக்கும்.

பிடிச்சிருந்தா நண்பர்களுக்கு பகிருங்கள்…உங்கள் பைக்கின் மைலேஜ் அதிகம் வர நீங்கள் கடைப்பிடிக்கும் வழிமுறை என்ன உங்கள் விமர்சனங்கள்…ஆட்டோமொபைல் தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்…

First Published on – 14-12-2016

Exit mobile version