ரூ.1 லட்சம் கோடி சந்தை மதிப்பை பெற்ற உலகின் முதல் இரு சக்கர வாகன தயாரிப்பாளர் – பஜாஜ் ஆட்டோ

1 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பீடு பெற்ற உலகின் முதல் இரு சக்கர வாகன உற்பத்தியாளர் என்ற பெருமையை பஜாஜ் ஆட்டோ பெற்றுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளரான பஜாஜ் ஆட்டோ சமீபத்தில் ரூ.650 கோடி முதலீட்டில் நான்காவது ஆலையை கட்டமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து பஜாஜ் ஆட்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகில் எந்த ஒரு சர்வதேச இரு சக்கர வாகன நிறுவனமும் இதற்கு முன் 1 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனத்தை பெற்றதில்லை.

வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் தனது புதிய உச்ச விலையான 3,479 ரூபாயை அடைந்தது மூலம், இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு சுமார் 1,00,670.76 கோடி அளவிலான உயர்வை அடைந்துள்ளது.

உலகின் மூன்றாவது பெரிய மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளராகவும், மூன்று சக்கர வாகன தயாரிப்பில் மிகப்பெரிய உற்பத்தியாளராகவும் பஜாஜ் ஆட்டோ உள்ளது. இந்நிறுவனம், கேடிஎம், ஹஸ்க்வர்னா ஆகியவற்றில் பெரும் அளவில் பங்குகளை கொண்டுள்ள நிலையில், ட்ரையம்ப் நிறுவனத்துடன் இணைந்து நடுத்தர மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் ஈடுபட உள்ளது.

Exit mobile version