Automobile Tamilan

ஏப்ரல் 1, 2025 முதல் மாருதி சுசூகி கார்களின் விலை 4 % வரை உயருகின்றது

மாருதி சுசூகி டிசையர்

நாட்டின் முன்னணி பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி நிறுவனத்தின் கார்களின் விலையை ஏப்ரல் 1, 2025 முதல் 4 சதவீதம் வரை உயர்த்துவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை பங்குசந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வரும் உற்பத்தி மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் பல்வேறு போக்குவரத்து செலவினங்கள் அதிகரித்து வருவதனை கருத்தில் கொண்டு விலையை உயர்த்துவது தவிர்க்க முடியவில்லை என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மற்றபடி ஒவ்வொரு மாடல்களிலும் வேரியண்ட் வாரியாக எவ்வளவு விலை உயருகின்றது என்பது போன்ற விபரங்களை நுணுக்கமாக வெளியிடவில்லை என்றாலும் விலை உயர்வு தவிர்க்க முடியவில்லை என மட்டும் மாருதி குறிப்பிட்டு இருக்கின்றது.

Exit mobile version