Automobile Tamilan

இந்தியாவில் எம்ஜி மோட்டார்சின் முதல் GS எஸ்யூவி அறிமுக விபரம்

சீனாவின் எஸ்ஏஐசி நிறுவனத்தின் கீழ் செயல்படும் எம்ஜி மோட்டார்ஸ், வருகின்ற செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் முதல் எஸ்யூவி மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. முதல் மாடலாக எம்ஜி ஜிஎஸ் விற்பனைக்கு வெளியிட வாய்ப்புகள் உள்ளது.

எம்ஜி GS எஸ்யூவி

அடுத்த சில மாதங்களில் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்ட எம்ஜி வாகன உரிமையாளர்களை கொண்டு வாடிக்கையாளர்களை ஈர்க்க எம்ஜி மோட்டார்ஸ் திட்டமிட்டு வருகின்றது.

எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் 1924 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் முழுதும் வடிவமைக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக வரலாறு உள்ள நிலையில், முந்தைய வாடிக்கையாளர்களை கொண்டு எம்ஜி தனது விற்பனை விரிவாக்கத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் முதல் மாடலாக எம்ஜி நிறுவனத்தின் ஜிஎஸ் என்ற பெயரிலான நடுத்தர ரக எஸ்யூவி மாடலை விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த எஸ்யூவி, மாடல் சர்வதேச அரங்கில் 1.5 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் கொண்டதாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இதை தவிர, இந்நிறுவனம் இசட்எஸ் என்ற எஸ்யூவி மாடலை ஜிஎஸ் மாடலுக்கு கீழாக நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளது. இந்த மாடல் ஹூண்டாய் க்ரெட்டா, டஸ்ட்டர், ஸ்கார்ப்பியோ உட்பட பல்வேறு மாடல்களுக்கு சவாலாக அமைய வாய்ப்புகள் உள்ளது.

கடந்த வருடம் எம்ஜி மோட்டார்ஸ் , ஜிஎம் நிறுவனத்தின் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ஹாலேல் ஆலையை கையகப்படுத்தியது குறிப்பிடதக்கதாகும்.

Exit mobile version