Automobile Tamilan

ரூ.3.04 லட்சம் வரை எம்ஜி மோட்டார் ஜிஎஸ்டி விலை குறைப்பு

mg gloster desertstrom

ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு எதிரொலியாக ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டாரின் ஆஸ்டர், ஹெக்டர், ஹெக்டர் பிளஸ் மற்றும் குளோஸ்டெர் எஸ்யூவிகளின் விலை ரூ.54,000 முதல் ரூ.3,04,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.

மற்றபடி, இந்நிறுவனம் விற்பனை செய்கின்ற எலக்ட்ரிக் கார்களுக்கு வரியில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து 5% விதிக்கப்படுகின்றது.  புதியதாக செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய ஜிஎஸ்டி விதிமுறைகள் முன்பாகவே செப்டம்பர் 7 முதலே நடைமுறைக்கு வருவதாக ஜேஎஸ்டபியூ எம்ஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்டர் விலை ரூ.54,000 வரையும், ஹெக்டர் பெட்ரோல் மற்றும் டீசல் அதிகபட்சமாக ரூ.1.49 லட்சம் வரையும், குளோஸ்டெர் விலை அதிகபட்சமாக ரூ.3.04 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

Models Current GST + Cess New GST Full GST Benefits
ASTOR 45 40 ₹54,000/-
HECTOR 45 (Petrol)
50 (Diesel)
40 ₹1,49,000/-
GLOSTER 50 40 ₹3,04,000/-

கூடுதலாக ஜிஎஸ்டி சலுகைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், எம்ஜி மோட்டார் இந்தியா வாடிக்கையாளர்களுக்கு 100% ஆன்-ரோடு நிதியுதவி மற்றும் 3 மாத EMI விடுமுறையை வழங்குகிறது, இது நிதி நெகிழ்வுத்தன்மையையும் மன அமைதியையும் மேம்படுத்துகிறது. பண்டிகை கால கார் வாங்குதல் பாரம்பரியமாக இருக்கும் நேரத்தில் இந்த சலுகைகள் தேவையை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் பெரும்பாலான ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் அனைவரும் ஜிஎஸ்டி சலுகைகளை அறிவித்து வருகின்றனர்.

Exit mobile version