Automobile Tamilan

டிரைவிங் லைசென்ஸ் உட்பட வாகனங்களின் சான்றிதழ் மார்ச் 2021 வரை நீட்டிப்பு

6af52 ministry of road transport

கோவிட்-19 பரவல் காரணமாக வாகனங்களுக்கான சான்றிதழ்கள் உட்பட ஓட்டுநர் உரிமம் என அனைத்தும் புதுப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது மார்ச் 31,2021 வரை நீட்டிக்க மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது.

கோவிட்-19 பரவல் காரணமாக கடந்த மாரச் முதலே வாகனங்களுக்கு எஃப்சி, காப்பீடு என அனைத்தும் தொடர்ந்து கால அவகாசம் வழங்கப்பட்டு நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் டிசம்பர் 31, 2020 வரை முடிவுற இருந்த நிலையில் மீண்டு மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், வாகனங்களுக்கு FC சான்றிதழ், அனைத்து வகையான அனுமதிகள், ஓட்டுநர் உரிமங்கள், பதிவுகள் என அனைத்தும் நாடு முழுவதும் லாக் டவுன் செயப்பட்டுள்ள காரணமாக செல்லுபடியாகும். பிப்ரவரி 1 க்குப் பிறகு காலாவதியான அல்லது காலாவதியான எந்த ஆவணங்களும் 2021 மார்ச் 31 வரை செல்லுபடியாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version