Automobile Tamilan

2023 ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 பைக்கின் விபரம் வெளியானது

re bullet 350

90 ஆண்டுகளுக்கு மேலாக சந்தையில் உள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 பைக்கில் புதிய J சீரிஸ் என்ஜின் பெற்றதாக விற்பனைக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் முக்கிய விபரம் மற்றும் வேரியண்ட் வாரியான வசதிகள் வெளியாகியுள்ளது.

முன்பாக விற்பனைக்கு வந்த மீட்டியோர் 350, கிளாசிக் 350 மற்றும் ஹண்டர் 350 ஆகியவற்றில் பொருத்தப்பட்டுள்ள J-சீரிஸ் என்ஜின் உள்ளது. முன்பாக விற்பனையில் உள்ள மாடல் UCE என்ஜின் நீக்கப்பட உள்ளது.

2023 RE Bullet 350

விற்பனையில் உள்ள மற்ற 350சிசி மாடல்களை போலவே, 20hp பவர் மற்றும் 27Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் ஆனது கொண்டிருக்கும். மற்றபடி, புல்லட் 350 என்ஜின் மிக சிறப்பான மைலேஜ் தரவல்லதாக விளங்கும்.

புதிய புல்லட் மூன்று விதமான வேரியண்டுகளை பெற்று ஒற்றை சேனல் ஏபிஎஸ் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றதாக வரவுள்ளது.  டாப் வேரியண்டில் கைகளால் வரையப்படுகின்ற கோல்டு ஸ்டிரிப்பிங் கோடுகளை பெற்று முழுமையான கருப்பு நிறத்தை கொண்டிருக்கும். 3D பேட்ஜிங், பின்புறத்தில் டிஸ்க் பிரேக் பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட உள்ளது.

நடுத்தர வேரியண்டில் பாடி நிறத்திலான டேங், கோல்டு ஸ்டிரிப், டிஸ்க் பிரேக் பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றிருக்கும்.

குறைந்த விலை மாடலில் ரியர் டிரம் பிரேக்பெற்று சிங்கிள் சேனல் ஏபிஎஸ், டேங்க் வேறு நிறத்தில் மற்ற பாகங்கள் கருப்பு, என்ஜின் க்ரோம் ஆக இருக்கும்.

புதிய புல்லட் 350 மாடலில் அகலமான டயர்களை பொருத்தப்பட்டு முன்புறத்தில் 100/90-19 யூனிட் மற்றும் பின்புறத்தில் 120/80-18, முன்புறத்தில் 19 இன்ச் ஸ்போக் வீல் மற்றும் பின்புறத்தில் 18 இன்ச் ஸ்போக் வீல் இருக்கும்.

புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 மோட்டார் சைக்கிள் செப்டம்பர் 1, 2023 அன்று விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளதால் விலை மற்றும் பிற விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.

 

image source

Exit mobile version