Automobile Tamilan

சிறந்த டிசைன் விருதினை வென்ற ஹூண்டாய் க்ரெட்டா

Hyundai Creta Knight edition front

இந்தியாவின் நடுத்தர எஸ்யூவி சந்தையில் மிகச் சிறப்பான வரவேற்பினை பெற்று இருக்கின்ற ஹூண்டாய் கரெக்டா எஸ்யூவி இந்தியாவின் சிறந்த டிசைனுக்கான 2024 ஆம் ஆண்டிற்கான விருதினை (India’s Best Design Awards 2024) வென்றுள்ளது.

புதிய ஹூண்டாய் கிரெட்டா டிசைன் இந்தியா வழங்கும் ‘இந்தியாவின் சிறந்த வடிவமைப்பு விருதுகள் 2024‘இந்தியாவின் சிறந்த வடிவமைப்பு திட்டங்களுக்கான விருது’. புதிய ஹூண்டாய் க்ரெட்டாவின் வசீகரிக்கும், நவீனமான மற்றும் முரட்டுத்தனமாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டு, ஹூண்டாயின் உலகளாவிய வடிவமைப்பு மொழியான ‘சென்சுவஸ் ஸ்போர்ட்டினஸ்’ என்பதற்கு இந்த பாராட்டு ஒரு சான்றாகும்.

ஹூண்டாய் அட்வான்ஸ்டு டிசைன் இந்தியாவின் துறைத் தலைவர் திருமதி சோஹி பார்க் பேசுகையில், “ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் ‘Sensuous Sportiness’ வடிவமைப்பு மொழி மூலம், வடிவமைப்புகளுக்காக உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ‘இந்தியாவின் சிறந்த வடிவமைப்பு விருதினை வென்றுள்ளது. விருது’ என்பது இந்த வடிவமைப்புத் தத்துவத்தின் முக்கிய அங்கீகாரமாகும், இது சமகால அழகியல் மற்றும் நவீன தொழில்நுட்பத்தினை காட்டுகிறது , புதிய ஹூண்டாய் CRETA தொடர்ந்து மக்களின் உணர்வுகளை வசீகரித்து புதிய தலைமுறை வாடிக்கையாளர்களை கவருகிறது.”

சமீபத்தில் ஹூண்டாய் இந்தியா நிறுவனம் புதிய கிரெட்டா நைட் எடிசன் மாடலை விற்பனைக்கு வெளியிட்டு இருக்கின்றது. மேலும் இந்தியாவின் நடுத்தர எஸ்யூவி சந்தையில் முதன்மையான மாடலாக தொடர்ந்து பல ஆண்டுகளாக விளங்கி வருகின்றது.

Exit mobile version