Automobile Tamilan

₹ 5.30 லட்சத்தில் மாருதி சூப்பர் கேரி மினி டிரக் விற்பனைக்கு வந்தது

மாருதி சுசூகி வர்த்தக வாகன சந்தையில் சூப்பர் கேரி மினி டிரக் மாடலை இலகுரக வரத்தக வாகனப் பிரிவில் விற்பனை செய்து வருகின்றது. புதிய சூப்பர் கேரி மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் இணைக்கப்பட்டு கூடுதலாக கேப் உடன் கூடிய சேஸ் வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் விற்பனையில் கிடைக்கின்ற சூப்பர் கேரி டிரக் இதுவரை 1,57,979 யூனிட்டுகள் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இலகுரக பிரிவில் உள்ள மஹிந்திரா ஜீட்டோ மற்றும் டாடா ஏஸ் கோல்டு போன்வற்றை எதிர்கொள்ளுகின்றது.

Maruti Super Carry

சூப்பர் கேரி டிரக்கில் பொருத்தப்பட்டுள்ள புதிய 1.2-லிட்டர், 4-சிலிண்டர், K-சீரிஸ் டூயல் ஜெட், டூயல் VVT என்ஜின், அதிகபட்சமாக 6000RPM-ல் 80.7 PS பவர் மற்றும் 2900RPM-ல் 104.4 Nm டார்க் பெட்ரோல் மாடலில் வழங்குகின்றது. அடுத்த உள்ள CNG வேரியண்டில், 6000rpm-ல் 71.6 ps பவர் மற்றும் 2800rpm-ல் 95 Nm டார்க் வழங்கும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.

இந்த என்ஜின் பயணிகள் சந்தையில் கிடைக்கின்ற கார்களில் வேகன் ஆர், ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ மற்றும் வரவிருக்கும் ஃபிரான்க்ஸ் ஆகியவற்றிலும் இடம்பெற்றுள்ளது.

சூப்பர் கேரி டிரக் 3,800 மிமீ நீளம், 1,562 மிமீ அகலம், 1,883 மிமீ உயரம் மற்றும் 2,110 மிமீ வீல்பேஸ் கொண்டுள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி பதிப்புகளின் அதிகபட்ச சுமை தாங்கும் திறன் முறையே 740 கிலோ மற்றும் 625 கிலோ என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய கேப் சேஸிஸ் வேரியண்ட் வந்துள்ளதால் வாடிக்கையாளர் விருப்பத்திற்கு ஏற்ப பாடி கட்டுமானத்தை மேற்கொள்ளலாம். முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், சீட் பெல்ட் ரிமைண்டர் மற்றும் இன்ஜின் இம்மொபைலைசர் உள்ளிட்டவையுடன். சிஎன்ஜி மாடலில் 5 லிட்டர் கொள்ளளவு பெற்ற அவசர தேவைகளுக்கான பெட்ரோல் டேங்க் சேர்க்கப்பட்டுள்ளது.

2023 Maruti Super Carry prices:

பெட்ரோல் Deck – ₹ 5,30,500

பெட்ரோல் Chassis – ₹ 5,15,500

CNG Deck – ₹ 6,30,500

CNG Cab Chassis – ₹ 6,15,500

Exit mobile version