61 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமிக்க நிசான் செய்த தந்திரம் என்ன ?

கடந்த மூன்று ஆண்டுகளில் கார் சுத்தம் செய்வதன் வாயிலாக இந்தியாவில் 61 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமித்துள்ளாதாக நிசான் நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது. எவ்வாறு இந்த நுட்பம் நிசான் நிறுவனத்துக்கு சாத்தியமானது என காணலாம்.

நிசான் இந்தியா

இந்தியாவில் செயல்பட்டு வரும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிசான் இந்தியா பிரிவு தங்களுடைய கார் சர்வீஸ் மையங்கள் வாயிலாக 2014 முதல் கார் ஃபோம் வாஷ் எனப்படும் நுரையால் கார் கழுவும் நுட்பத்தை செயல்படுத்தி வருகின்றது.

இந்த நுட்பத்தினால் கார் ஒன்றுக்கு சராசரியாக 90 லிட்டர் தண்ணீரை சேமிக்க முடிவதாக நிசான் தெரிவிக்கின்றது. எவ்வாறு எனில் சாதாரன முறையில் ஒரு முழு காரை கழுவினால் சுமார் 160 லிட்டர் தண்ணீர் வரை தேவைப்படுகின்றதாம், இதுவே நிசான் அறிமுகம் செய்துள்ள நவீன நுரை வழியிலான கார் கழுவும் முறையினால் தண்ணீர் பயன்பாடு 45 சதவிகிதம் குறைகின்றதாம்.

இந்த நுட்பத்தினால் காரின் பெயின்ட் உள்பட எந்தவொரு பாகத்திற்கும் எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படாது என தெரிவிக்கின்றது. மேலும் நிசான் நிறுவனம் மட்டுமே நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் இந்தியக் குடும்பங்களுக்கான நீரை சேமிப்பதாக தெரிவிக்கின்றது.

இது பற்றி கருத்து தெரிவித்த இந்திய நிசான் நிறுவனத்தின் துணைத்தலைவரான சஞ்சீவ் அகர்வால் வாடிக்கையாளர்களுக்கு புதிதான நுட்பங்களை விற்பனைக்கு பிந்தைய சேவைகளிலும் வழங்கும் நோக்கத்திலே செயல்படுத்தப்பட்ட ஃபோம் வாட்டர் வாஷ் நுட்பமனாது, வாடிக்கையாளர்களுக்கு வாகனத்தை விரைவாகவும், தூய்மையாகவும் வழங்குவதுடன் கூடுதலாக தண்ணீரை சேமித்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version