Automobile Tamilan

ஜனவரி 2025ல் GEN 3 இ-ஸ்கூட்டர்களை வெளியிடும் ஓலா எலெக்ட்ரிக்

Ola gen3 escooters

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் மிக சிறப்பான வரவேற்பினை பெற்று வரும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மூன்றாவது தலைமுறை S1 Pro, S1X, S1 வரிசை GEN 3 ஸ்கூட்டர்களை வருகின்ற ஜனவரி 2025 முதல் விற்பனைக்கு வெளியிட உள்ளதாக அறிவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பாக இந்த மாடல் முன்பாக ஆகஸ்ட் 2025 முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Q2 FY25 தொடர்பாக நடந்த முதலீட்டாளர் கூட்டத்தை தொடர்ந்து ஒழுங்குமுறை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையின் மூலம் S1 Gen 3 தயாரிப்புகளை 2025 ஜனவரியில், திட்டமிடலுக்கு முன்னதாகவே வெளியாகும் என குறிப்பிட்டுள்ளது.

Gen 3 வரிசையில் தற்பொழுதுள்ள S1 வரிசை மட்டுமல்லாமல் S2 மற்றும் S3 ஆகிய இரண்டு புதிய துணை பிராண்டுகளை அறிமுகப்படுத்தி, ஏற்கனவே உள்ள S1 வரிசையை விட பிரீமியம் மாற்றங்களை பெற்ற ஐந்து கூடுதல் ஸ்கூட்டர்களை வெளியிட உள்ளது.

S2 மற்றும் S3 போன்ற வரிசையில் வரவுள்ள ஸ்கூட்டர்கள் அட்வென்ச்சர், மேக்ஸி ஸ்டைல், டூரிங் அனுபவத்திற்கான ஸ்கூட்டர்கள் என மொதமாக 5 ஸ்கூட்டர்களை அடுத்து வரும் மாதங்களில் வெளியிட ஓலா திட்டமிட்டுள்ளது.

மேலும் இந்நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான 4680 பாரத் செல்களைக் கொண்டு பேட்டரிகள் தயாரிக்கப்படுவதனால் விலையும் சற்று மலிவாக இருக்கலாம் என தெரிகின்றது.

ஓலா எலக்ட்ரிக் சர்வீஸ் தொடர்பான கோளாறுகளை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் ‘Network Partner Programme’  மூலம் புதிதாக பல்வேறு சர்வீஸ் தொடர்பான மேம்பாடுகளை வழங்கி வருவதாகவும் கூடுதலாகவும் பல்வேறு கட்டங்களாக சர்வீஸ் சேவைகளை விரிவுப்படுத்தி வருவதாக குறிப்பிடுகின்றது.

ஓலா எலக்ட்ரிக் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் 10,000 மேற்பட்ட சர்வீஸ் மையங்கள் மற்றும் விற்பனை நிலையங்களை கொண்டு வர உள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version