Category: Auto News

தமிழில் ஆட்டோமொபைல் செய்திகள், முக்கிய வாகனச் செய்திகள் உடன் பல்வேறு விபரங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.  Automobile News Tamil latest upcoming New Bikes & Cars Scoops, industry news in Tamil

  • ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரில் அறிமுக விபரம்

    ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரில் அறிமுக விபரம்

    2024 Hero destini 125 teaserஇந்தியாவின் 125சிசி சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் புதிய டெஸ்டினி 125 ஸ்கூட்டர் 2024 ஆம் ஆண்டிற்கான விற்பனைக்கு செப்டம்பர் முதல் வார இறுதியில் வெளியிடப்பட உள்ளது.

    2024 ஆம் ஆண்டிற்கான டெஸ்டினி மாடல் முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட டிசைன் மற்றும் நேர்த்தியான ரெட்ரோ அமைப்பினை தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டு முன்புறத்தில் H ஆங்கில எழுத்தை நினைவுப்படுத்தம் வகையிலான குரோம் பாகங்கள் அல்லது பிரான்ஸ் நிறத்திலான பாகங்களை பெற்றிருக்கும் இரண்டு விதமான வேரியண்டுகள் ஆனது பெற உள்ளது. டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் என இரு விதமாக வழங்கப்படும்.

    கூடுதலாக கனெக்டிவிட்டி சார்ந்த ஹீரோ Xtech அம்சங்களை பெறுகின்ற பெரிய டிஜிட்டல் கிளஸ்டர் பெற்றிருக்கும் மற்றபடி பார்த்தீர்கள் என்றால் இந்த மாடல் வெள்ளை, சிவப்பு, நீலம், கருப்பு, மேக்னெட்டா நீலம் என ஐந்து விதமான நிறங்கள் ஆனது பெற்று இருக்க வாய்ப்புள்ளது.

    9 BHP பவர் மற்றும் 10.4 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 124.6 cc என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் சிவிடி கியர்பாக்ஸ் பெற்றிருக்கும்.

    இந்த மாடலுக்கு போட்டியாக ஏற்கனவே சந்தையில் கிடைக்கின்ற சுசுகி ஆக்சஸ் 125, ஹோண்டா ஆக்டிவா 125, டிவிஎஸ் ஜூபிடர் 125, யமஹா நிறுவனத்தின் ஃபேசினோ போன்ற மாடல்கள் எல்லாம் உள்ளன.

    வரும் செப்டம்பர் 6ஆம் தேதி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற இந்த ஸ்கூட்டர் மாடல் விலையில் சிறிய அளவில் மாற்றங்கள் பெற்றிருக்கலாம். மேலும் குறைந்த விலை டெஸ்டினி பிரைம் மாடல் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளன.

  • கேடிஎம் 250, 390 அட்வென்ச்சர் பைக்கிற்கு டாப் பாக்ஸ் இலவச சலுகை..!

    கேடிஎம் 250, 390 அட்வென்ச்சர் பைக்கிற்கு டாப் பாக்ஸ் இலவச சலுகை..!

    Ktm adventure 390 with topஅட்வென்ச்சர் ரக கேடிஎம் நிறுவனத்தின் 250சிசி மற்றும் 390 சிசி அட்வென்ச்சர் ரக மாடல்களுக்கு தற்பொழுது 13,000 மதிப்புள்ள இலவச டாப் பாக்ஸ் ஆனது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த குறிப்பிடப்பட்டுள்ள சலுகை ஆனது ஸ்டாக் இருப்பில் உள்ளவரை மட்டுமே என இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது.

    நாட்டில் உள்ள அனைத்து கேடிஎம் டீலர்களிடமும் இந்த சிறப்பு சலுகை அல்லது கிடைக்கும் இந்த இரு பைக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 13,000 மதிப்புள்ள GIVI Top-Box ஆனது பொருத்தி தரப்படும் என இந்நிறுவனம் குறிப்பிட்டு இருப்பதுடன் இந்த டாப் பாக்ஸ் ஆனது மிக சிறப்பான வகையில் ஏரோ டயனமிக் சார்ந்த அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு இருப்பதுடன் தண்ணீர் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் மேலும் இலகுவாக தேவைப்படும் பொழுது நீக்கிவிட்டு பிறகு பொருத்திக் கொள்ளும் வாய்ப்பு வழங்குகின்றது.

    கேடிஎம் அட்வென்ச்சர் 390 X ரூ.2.80 லட்சம் முதல் துவங்கி டிராக்சன் கண்ட்ரோல் டூயல் சேனல் கார்னரிங் ஏபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டு இருக்கின்ற நடுத்தர வேரியண்ட் ரூபாய் 3.39 லட்சத்திலும் அடுத்ததாக டாப் வேரியண்ட் அட்ஜெஸ்டபிள் சஸ்பென்ஷன் மற்றும் ஸ்போக் வீல் கொண்டுள்ள மாடல் ரூ.3.60 லட்சம் ஆகும்.

    கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடல் ரூபாய் 2.43 லட்சத்தில் துவங்குகின்றது.

     

  • 8வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ரூ.2.50 லட்சம் சலுகையை அறிவித்த ஜீப் இந்தியா

    8வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ரூ.2.50 லட்சம் சலுகையை அறிவித்த ஜீப் இந்தியா

    jeep compass suv

    ஸ்டெல்லானைட்ஸ் குழுமத்தின் கீழ் செயல்படுகின்ற ஜீப் நிறுவனம் இந்தியாவில் தனது எட்டாவது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு காம்பஸ் எஸ்யூவி மாடலுக்கு அதிகபட்சமாக ரூபாய் 2.50 லட்சம் வரை சலுகைகளை அறிவித்துள்ளது.

    அதே நேரத்தில் தனது மற்றொரு மாடலான மெரீடியன் எஸ்யூவி காருக்கு அதிகபட்சமாக ரூபாய் 2 லட்சம் வரை சலுகை அறிவித்துள்ளது. கூடுதலாக இந்நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகின்ற ஜீப் ரேங்கலர் மற்றும் கிராண்ட் செரோக்கீ மாடல்களுக்கும் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.

    மேலும் பராமரிப்பு சர்வீஸ் தொடர்பான சேவைகளில் லேபர் சார்ஜஸ் உள்ளிட்டவைகளுக்கு 22 சதவீதம் சலுகை அறிவித்துள்ளது. கூடுதலாக கார் பராமரிப்பு தொடர்பான சர்வீஸ் சேவைகளில் 7.8% சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வீஸ் தொடர்பான சலுகைகள் ஆகஸ்ட் 17 வரை மட்டுமே கிடைக்கும் என நிறுவனம் குறிப்பிட்டு இருக்கின்றது.

    குறிப்பிடப்பட்டுள்ள சலுகை மற்றும் பல்வேறு விபரங்கள் டீலர்களை பொருத்த மேலதிக விபரங்களுக்கு அருகாமையில் உள்ள டீலர்களை தொடர்பு கொள்ளுங்கள்

  • 2,555 ஆல்டோ K10 கார்களை திரும்ப அழைத்த மாருதி சுசூகி

    2,555 ஆல்டோ K10 கார்களை திரும்ப அழைத்த மாருதி சுசூகி

    Maruti Suzuki Alto K10மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற ஆல்டோ K10 காரில் உள்ள ஸ்டீயரிங் கியர்பாக்ஸ் பிரச்சனையால் சுமார் 2,555 கார்களை திரும்ப அழைப்பதாக அறிவித்துள்ளது.

    ஸ்ட்யரிங் கியர்பாக்சில் ஏற்பட்டுள்ள கோளாறினை சரி செய்வதற்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ள இந்த கார்களுக்கான ஒரு உதிரிபாகங்கள் முற்றிலும் இலவசமாக மாற்றித் தரப்பட உள்ளது.

    இது குறித்து மாருதி சுசூகி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    ஸ்டீயரிங் கியர்பாக்ஸ் அசெம்பிளியில் (“பகுதி”) குறைபாடு இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்ற 2,555 ஆல்டோ K10 வாகனங்களை திரும்பப் பெறுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த குறைபாடு, அரிதான சந்தர்ப்பங்களில், வாகனத்தின் ஸ்டீயரிங் கட்டுப்பாட்டை பாதிக்கலாம். மிகுந்த எச்சரிக்கையுடன், பாதிக்கப்பட்ட வாகனங்களின் வாடிக்கையாளர்கள், பகுதி மாற்றப்படும் வரை வாகனத்தை ஓட்டவோ அல்லது பயன்படுத்தவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் மாருதி சுஸுகியின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் மூலம் தொடர்பு கொண்டு, பாகத்தை பரிசோதிக்கவும் மாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுளளது” என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

  • சிட்ரோன் பாசால்ட் கூபே எஸ்யூவி அறிமுகமானது

    சிட்ரோன் பாசால்ட் கூபே எஸ்யூவி அறிமுகமானது

    citroen-basalt-coupe-suv-revealed

    இந்தியாவில் சிட்ரோன் நிறுவனத்தின் 5வது மாடலாக வெளியாகியுள்ள Basalt கூபே எஸ்யூவி மாடலில் மிகச் சிறப்பான வசதிகளை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடிப்படையாகவே 6 ஏர்பேக்குகள் அனைத்து வேரியண்டிலும் கிடைக்க உள்ளது.

    பாசால்டில் 1.2 லிட்டர் NA எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் என இரு விதமான ஆப்ஷனில் வழங்கப்பட உள்ளது. போலார் வெள்ளை, ஸ்டீல் கிரே, பிளாட்டினம் கிரே, காஸ்மோ நீலம், கார்னெட் சிவப்பு என 5 ஒற்றை நிறங்களுடன் கருப்பு நிற மேற்கூரையுடன் போலார் வெள்ளை, மற்றும் கார்னெட் சிவப்பு என இரு டூயல் டோன் நிறங்களை கொண்டுள்ளது.

    Citroen Basalt

    துவக்க நிலை வேரியண்டில் 1.2 லிட்டர் Puretech 82 நேச்சுரல் ஆஸ்பிரேட்டேட் எஞ்சின் அதிகபட்சமாக 82 PS பவர் மற்றும் 110 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது. இந்த 1.2லிட்டர் NA எஞ்சின் மைலேஜ் 18Kmpl ஆகும்.

    அடுத்து, 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் Puretech 110 எஞ்சின் பவர் 110 PS மற்றும் 190 Nm டார்க் (205 Nm டார்க் ஆட்டோமேட்டிக்) வெளிப்படுத்துகின்றது. இதில் ஆறு வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. டர்போ எஞ்சின் மேனுவல் மைலேஜ் 19.5Kmpl மற்றும் ஆட்டோமேட்டிக் மைலேஜ் 18.7Kmpl ஆகும்.

    முன்புறத்தில் ஏற்கனவே விற்பனையில் உள்ள மாடல்களான C3, C3 ஏர் கிராஸ் ஆகியவற்றை நினைவுபடுத்தும் வகையிலான முன்பக்க கிரில் மற்றும் புதிய எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட் மற்றும் எல்இடி ரன்னிங் விளக்குகளை கொண்டிருக்கின்றது.

    citroen basalt side

    பாசால்ட்டின் வீல்பேஸ் 2,651 மிமீ கொண்டுள்ள நிலையில் கிரவுண்ட் கிளியரன்ஸ் 180 மிமீ ஆக உள்ள நிலையில் 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல் பெற்று உயரமான வீல் ஆர்ச் பக்கவாட்டில் பெற்றுள்ளது.

    மிக நேர்த்தியான கூபே ஸ்டைல் கொண்டு எல்இடி டெயில் லைட் பின்புறத்தில் 470 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ஸ்பேஸ் பாசால்ட் மாடல் பெறுகின்றது.

    இன்டீரியரில் மிக நேர்த்தியான ஸ்டைலிங் பெற்ற 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகளுடன் 40க்கும் மேற்பட்ட கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களையும் பெறுகின்றது. 7.0 அங்குல டிஜிட்டல் கிளஸ்டர் கொண்டுள்ளது. பின் இருக்கைகளுக்கு தொடையின் கீழ் அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, வயர்லெஸ் போன் சார்ஜர் கொண்டிருப்பதுடன் 6 ஏர்பேக்குகளை அடிப்படையாக கொண்டுள்ளது.

    டாடா கர்வ் மாடலுக்கு நேரடியான சவால் விடுக்கும் பாசால்ட் எஸ்யூவி விலை ரூ.10 லட்சத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    citroen basalt rear

  • 77 நகரங்களில் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கை அறிமுகம் செய்யும் பஜாஜ் ஆட்டோ

    77 நகரங்களில் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கை அறிமுகம் செய்யும் பஜாஜ் ஆட்டோ

    freedom cng bike 1

    ஆகஸ்ட் 15 இல் 77 ஆம் ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் அதே நாளில் நாட்டின் 77 நகரங்களில் உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார் சைக்கிள் ஃப்ரீடம் 125 விற்பனைக்கு கிடைக்க துவங்கும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    ஏற்கனவே நாடு முழுவதும் இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பல்வேறு டீலர்களுக்கு இந்த மாடலானது வர துவங்கியுள்ளதால் விரைவில் டெலிவரி தொடங்கப்பட உள்ளது.

    இரண்டு லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃப்ரீடம் சிஎன்ஜி டேங்க் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 2 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொண்டுள்ள இந்த மாடல் ஆனது ஒட்டுமொத்தமாக 330 கிலோமீட்டர் பயணிக்கும் வரம்பினை வழங்கும் என இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது 125 சிசி இன்ஜின் பயன்படுத்தப்பட்ட இந்த மாடலானது அதிகபட்சமாக 9.5 hp பவர் மற்றும் 9.7 Nm பார்க்கினை வெளிப்படுத்தி ஐந்து வேக மேனுவல் கியர்பாக்ஸ் பாக்ஸ் ஆனது கொண்டிருக்கின்றது.

    குறிப்பாக மூன்று விதமான வேரியண்டுகள் ஆனது இந்த மாடலில் கிடைக்கின்றது டிஸ்க் டிரம் பிரேக் என இருவிதமாக பெற்று ஒன்று ட்ரம் ஆடலுடன் கூடிய எல்இடி ஹெட்லைட் வேரியண்ட்டும் கிடைக்கின்றது.

    குறிப்பாக இந்நிறுவனம் கூறுவது பெட்ரோல் மாடல்களை விட 50 சதவீத வரை எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் மாடலாக விளங்குகின்றது