டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜிஎஸ்டி குறைப்பின் காரணமாக டியாகோ முதல் சஃபாரி வரை உள்ள மாடல்களின் விலை ரூ.65,000 முதல் ரூ.1.45 லட்சம் வரை செப்டம்பர் 22 ஆம் தேதி குறைய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
குறைந்தபட்சமாக டாடாவின் கர்வ் ICE ரக மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.65,000 வரையும், டியாகோ, டிகோர் மற்றும் பன்ச் ஆகியவற்றுக்கு முறையே ரூ,75000, 80,000 மற்றும் ரூ.85,000 வரை கிடைக்க உள்ளது. அல்ட்ரோஸூக்கு அதிகபட்சமாக ரூ.1.10 லட்சம் வரை கிடைக்கும்.
கூடுதலாக இந்நிறுவனத்தின் ஹாரியர் மற்றும் சஃபாரி க்கு ரூ.1.45 லட்சம் முதல் ரூ.1.55 லட்சமும், பிரபலமான நெக்ஸானுக்கு ரூ.1.55 லட்சம் வரை கிடைக்கின்றது. குறிப்பாக டாடாவின் ICE ரக வாகனங்களுக்கு மட்டும் சலுகை கிடைக்க உள்ளது. இவி வாகனங்களுக்கு தொடர்ந்து 5% ஜிஎஸ்டியில் எந்த மாற்றமும் இல்லை.
மாடல் | Reduction in Price (Rs.) |
---|---|
Tiago | up to 75,000/- |
Tigor | up to 80,000/- |
Altroz | up to 1,10,000/- |
Punch | up to 85,000/- |
Nexon | up to 1,55,000/- |
Curvv | up to 65,000/- |
Harrier | up to 1,40,000/- |
Safari | up to 1,45,000/- |
குறிப்பு., வேரியண்ட் வாரியான விலைப் பட்டியல் செப்டம்பர் 22 ஆம் தேதி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்க உள்ளது.
டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் லிமிடெட் மற்றும் டாடா பயணிகள் மின்சார மொபிலிட்டி லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சைலேஷ் சந்திரா, “2025 செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும் பயணிகள் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி குறைப்பு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவாகும், இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மக்களுக்கு தனிப்பட்ட வாகனங்களை மேலும் அணுகக்கூடியதாக மாற்றும்.
மாண்புமிகு பிரதமரின் தொலைநோக்குப் பார்வை, மாண்புமிகு நிதியமைச்சரின் நோக்கம் மற்றும் எங்கள் வாடிக்கையாளர் முன்னுரிமை என்ற தத்துவத்திற்கு இணங்க, டாடா மோட்டார்ஸ் இந்த சீர்திருத்தத்தின் நோக்கத்தையும் உணர்வையும் முழுமையாக மதிக்கும், ஜிஎஸ்டி குறைப்பின் முழு பலனையும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவோம்.
இது எங்கள் பிரபலமான கார்கள் மற்றும் எஸ்யூவிகளின் வரிசையை அனைத்து பிரிவுகளிலும் குறைந்த விலையில் அணுகக்கூடியதாக மாற்றும், முதல் முறையாக வாங்குபவர்களை மற்றும் பரந்த அளவிலான வாடிக்கையாளர் வாகனங்களை வாங்கும் மாற்றத்தை துரிதப்படுத்தும்.”