குறைந்த விலை ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்

ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

டிவிஎஸ் மோட்டாரின் ஐக்யூப் வெற்றியை தொடர்ந்து குறைந்த விலை மின்சார ஸ்கூட்டரை ஆர்பிட்டர் என்ற பெயரில் விற்பனைக்கு ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. குறிப்பாக இந்த ஸ்கூட்டரின் பேட்டரி ஆப்ஷனை பொறுத்தவரை ஐக்யூப் மாடலில் உள்ளதை பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது.

வெளியிடப்பட்டுள்ள டீசரில் ‘O’ என்ற எழுத்துடன் அமைந்துள்ள நிலையில் Get Ready For AN Electrified Ride  என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் மற்றபடி டிசைன் தொடர்பான எந்த விபரமும் கிடைக்கவில்லை.

குறிப்பாக வரவுள்ள ஆர்பிட்டரில் டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் பல்வேறு அம்சங்களை கொண்டதாக அமைந்துள்ள நிலையில்,  ஐக்யூப்பில் உள்ள 2.2Kwh, 3.1Kwh, 3.5Kwh,  3.5Kwh, 3.5Kwh, மற்றும் 5.3Kwh  போன்ற பேட்டரிகளில் அடிப்படையான ஆரம்ப நிலையில் உள்ளவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக, சமீபத்தில் வந்துள்ள விடா விஎக்ஸ்2 உள்ளிட்ட மாடல்களுடன் ஓலா குறைந்த விலை ஸ்கூட்டர்களுடன் சேட்டக் உள்ளிட்ட பல்வேறு மாடல்களை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.

Exit mobile version