Automobile Tamilan

வரவிருக்கும் டிவிஎஸ் மோட்டாரின் மூன்று இருசக்கர வாகனங்கள் விவரம்

upcoming tvs bikes and scooters

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அடுத்த இரு மாதங்களுக்குள் ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் என்டார்க் 150 இரண்டு ஸ்கூட்டர் மற்றும் RTX300  அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் என மூன்று மாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.

ஆகஸ்ட்28ல் டிவிஎஸ் ஆர்பிட்டர்

விற்பனையில் உள்ள ஐக்யூப் ஸ்கூட்டரை விட குறைந்த விலையிலான மின்சார பேட்டரி ஸ்கூட்டரை ஆர்பிட்டர் என்ற பெயரில் ரூ.1 லட்சத்துக்கும் குறைந்த விலையில் எதிர்பார்க்கப்படும் நிலையில், குறிப்பாக பேட்டரி ஆப்ஷனில் ஆரம்ப நிலை வேரியண்ட் 2.2kwh  பெறக்கூடும்.

வசதிகளில் பெரும்பாலும் விலை குறைப்பை கருத்தில் கொண்டு எளிமையான கிளஸ்ட்டருடன் குறைந்த கனெக்ட்டிவிட்டி அம்சங்கள் மற்றும் டிரம் பிரேக் இரு டயரிலும் பெற்றிருக்கலாம். மற்றபடி, எவ்விதமான நுட்ப விபரங்களும் தற்பொழுது வெளியாகவில்லை.

செப்டம்பர் 1ல் டிவிஎஸ் என்டார்க் 150

குறிப்பாக ஸ்போர்ட்டிவ் ஸ்கூட்டர் சந்தையில் கிடைக்கின்ற என்டார்க்125 மாடலை தொடர்ந்து பிரீமியம் வசதிகளுடன் சக்திவாய்ந்த என்டார்க் 150ல் லிக்யூடு கூல்டு எஞ்சின் பெற்று குறிப்பாக ஏரோக்ஸ் 155 மற்றும் ஜூம் 160 ஆகியவற்றை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிஸ்க் பிரேக்குடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பெற்று டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களுடன் சிறப்பான பூட்வசதியுடன் எல்இடி ஹெட்லைட் கொடுக்கப்ட்டிருக்கும் விலை அனேகமாக ரூ.1.50 லட்சத்துக்குள் அமையலாம்.

டிவிஎஸ் ஆர்டிஎக்ஸ் 300

அதிகப்படியான நெடுஞ்சாலை பயணங்களை மேற்கொள்ளும் வகையில் அட்வென்ச்சர் டூரிங் ரக மாடலாக வரவுள்ள RTX300 அனேகமாக செப்டமபர் இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டு உடனடியாக டெலிவரி வழங்கப்பட வாய்ப்புள்ளது.

299.1cc சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 9,000 rpmல் 35hp பவர் மற்றும் 7,000 rpmல் 28.5 Nm வெளிப்படுத்துவதுடன் 6 வேக கியர்பாக்ஸ் கொண்டிருக்கும். குறிப்பாக இந்த மாடலில் பல்வேறு டூரிங் சார்ந்த அம்சங்களுக்கு ஏற்றதாக விளங்க உள்ள ஆர்டிஎக்ஸ் 300ல் கோல்டன் நிற அப்சைடு டவுன் ஃபோர்க்குடன் முன்புறத்தில் 19 அங்குல வீல் மற்றும் 17 அங்குல வீல் பெற்றாலும் அலாய் வீல் பெற்றிக்கும்.

புதிதாக வரவுள்ள டிவிஎஸ் ஆர்டிஎக்ஸ் 300 பைக்கின் விலை ரூ.1.80 முதல் ரூ.2 லட்சத்துக்குள் அமைந்திருக்கலாம். முழுமையான ஆஃப் ரோடு பயணங்களுக்கு ஏற்றதாக அல்லாமல் டூரிங் செயல்பாடுகளுக்கானதாக விளங்கலாம்.

Exit mobile version