Automobile Tamilan

ரூ.4.84 லட்சம் வரை தள்ளுபடியை அறிவித்த ஃபோக்ஸ்வேகன்

Volkswagen Virtus GT line

ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் தனது மாடல்களுக்கு 2024 ஆம் ஆண்டின் இறுதி மாத கொண்டாட்டத்தை முன்னிட்டு Big Rush என்ற பெயரில் சிறப்பு தள்ளுபடி ஆக அதிகபட்சமாக ரூபாய் 4,84,000 வரை டிகுவான் எஸ்யூவி மாடலுக்கு தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது.

அதிகபட்சமாக ரொக்க தள்ளுபடி ரூ.2 ,00,000 வரையும் கூடுதலாக எக்ஸ்சேஞ்ச் போனஸ் கார்ப்பரேட் போனஸ் மற்றும் கூடுதல் சலுகைகள் என பலவற்றுடன் சேர்த்து ஒட்டுமொத்தமாக 4,84,000 வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து விர்டஸ் மாடலை பொருத்தவரை ரூ.66,000 முதல் 1.90 லட்சம் தள்ளுபடி உள்ளது. இதில் அதிகபட்ச தள்ளுபடியாக ஹைலைன் வேரியண்டுக்கு ரூ.1,90,000 வழங்கப்படுகின்றது.

அடுத்து ஃபோக்ஸ்வேகன் டைகன் எஸ்யூவி மாடலுக்கு ரூ.70,000 முதல் ரூ.2,50,000 வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் GT plus 1.5l வேரியண்டுக்கு ரூ.2.50 லட்சம் கிடைக்கின்றது.

கொடுக்கப்பட்டுள்ள சலுகைகள் அனைத்தும் டீலர்களைப் பொறுத்து மாறுபடும் அதே நேரத்தில் வேரியன்டை பொறுத்தும் கையிருப்பில் உள்ள மாடல்களை பொருத்தும் மாறுபடும் முழுமையான விபரங்களை அறிந்து கொள்ள அருகாமையில் உள்ள ஃபோக்ஸ்வேகன் டீலர்களை அணுகவும் என இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version