இந்திய ஸ்போர்ட்டிவ் பைக் சந்தையில் ரூபாய் 3.26 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகின்ற யமஹா ஆர்-3 பைக்கில் மெயின் பவர் சுவிட்ச் மற்றும் எரிபொருள் கலன் பொருத்தப்பட்டுள்ள இடத்தில் உள்ள கோளாறுகளை சரிசெய்ய திரும்ப அழைக்கப்படுகின்றது.
இந்தியாவில் விற்பனை செய்யபட்டுள்ள ஆர்3 மாடலில் 1155 பைக்குகளில் உள்ள மெயின் பவர் சுவிட்ச் பகுதியில் நீர் படும்பொழுது அவற்றில் துருப்பிடிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தவிர எரிபொருள் கலன் பொருத்தப்பட்டுள்ள இடத்தில் உள்ள தாங்கி பிடிக்கும் கொக்கிகளில் அதாவது பிராக்கெட்டுகளில் உள்ள கோளாறு காரணமாக எரிபொருள் தொட்டியில் விரிசல் ஏற்பட்டு பெட்ரோல் வெளியேறும் வாய்ப்புள்ளதாக அறியப்பட்டுள்ளது. இந்த இரு கோளாளுகளையும் சரிசெய்யும் நோக்கிலே ஆர்-3 பைக்குகள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள யமஹாவின் அனைத்து அதிகார்வப்பூர்வ டீலர்கள் வாயிலாகவும் இந்த குறைகளை இலவசமாக நீக்கி தரப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு இதுகுறித்தான தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யமஹா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
யமஹா ஆர்-3 பைக்கில் 321 சிசி இரட்டை சிலிண்ட என்ஜின் பொருத்தப்பட்டு 42 hp பவருடன் 29.6 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
அடுத்த சில நாட்களில் விலை அறிவிக்கப்பட உள்ள புதிய 2021 கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால்…
5 இருக்கை கிரெட்டா காரின் அடிப்படையிலான 6 மற்றும் 7 இருக்கை பெற்றதாக ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி என்ற பெயரில்…
இரு வண்ண கலவை நிறத்தை பெற்ற புதிய 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.5.73 லட்சம் முதல் அதிகபட்சமாக…
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா RAV4 க்ராஸ்ஓவர் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற…
பியாஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அபே E-City FX, E-Xtra FX (Fixed Battery) எலக்ட்ரிக் ஆட்டோ பயணிகள் மற்றும் சுமை…
இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற ஹேட்ச்பேக் கார்களில் முதன்மையாக விளங்கும் மாருதியின் ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. சிறிய…