ரூ.2.10 லட்சம் விலையில் கிடைக்கின்ற யெஸ்டி ரோட்ஸ்டெர் பைக்கில் தற்பொழுது கூடுதலாக எவ்விதமான கட்டணமும் இல்லாமல் டிரெயில் பேக் அக்சஸரீஸ் ஆனது வழங்கப்படுகின்றது இதனுடைய மதிப்பு 16,000 ரூபாயாகும்.
யெஸ்டி ரோட்ஸ்டெர் பைக் மாடலில் தொடர்ந்து 334சிசி, லிக்யூடு கூல்டு என்ஜின் மூலம் அதிகபட்சமாக 29 bhp மற்றும் 28.9 Nm டார்க்கை வழங்குகிறது. இந்த மாடலில் ஆறு வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
194 கிலோ எடையைக் கொண்டு 12.5 லிட்டர் எரிபொருள் டேங்குடன் பொருத்தப்பட்டுள்ளது, இது சாலையில் நிலைத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. வசதியான 790 மிமீ இருக்கை உயரம் மற்றும் முன்னோக்கி அமைக்கப்பட்ட கால் வைக்கும் வகையில் யெஸ்டி ரோட்ஸ்டரை உங்கள் சிறந்த ரைடிங் துணையாக விளங்கும் என யெஸ்டி குறிப்பிடுகின்றது.
Trail Pack-ல் உள்ளவை
டிரெயில் பேக்குடன் யெஸ்டி Roadster விலை ரூ. 2.09 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.