Automobile Tamilan

யூஸ்டு பைக் செக்லிஸ்ட் என்ன ?

பழைய பைக் அல்லது செகன்ட் ஹேன்ட் பைக் வாங்கும் முன் சோதனை செய்ய வேண்டிய முக்கியமானவை எவை ? யூஸ்டு பைக்கில் நாம் சோதனை செய்ய வேண்டிய செக்லிஸ்ட் முழுவிபரம்.

யமஹா ஆர்எக்ஸ்100
யமஹா ஆர்எக்ஸ்100

முறையாக சோதனை செய்து யூஸ்டு பைக் வாங்கினால் பல இன்னல்களை தவிர்க்க உதவும். இந்த பழைய  பைக் வாங்குவதற்க்கான செக்லிஸ்ட் பயன்படுத்தி கொள்ளுங்கள்…

இதற்க்கு முந்தய பதிவு படிங்க ; யூஸ்டு பைக் வாங்கலாமா குறிப்புகள்

பழைய பைக் செக்லிஸ்ட்

1. பைக்கின் மீது கீறல்கள் மற்றும் டென்ட் விழுந்துள்ளதா பாருங்கள்.
2. பெயின்ட் உரிந்திருப்பது மற்றும் ஸ்டிக்கரிங் கிழிந்திருக்கின்றதா
3. முகப்பு விளக்கு , இன்டிகேட்டர் , பின்புற விளக்குகள் என அனைத்து விளக்குகளையும் சோதனை செய்யுங்கள்.
4. இருக்கை அமைப்பு மற்றும் சொகுசு தன்மை
5. எரிபொருள் கலன் உட்புறம் மற்றும் மூடுதற்க்கு சரியாக உள்ளதா
6. ஸ்பீடோமீட்டர் மற்றும் எரிபொருள் இன்டிகேட்டர் இயங்குகின்றதா ?
7. பைக்கின் பூட்டுதல் சிறப்பாக உள்ளதா?
8. டயர் தேய்மானம்
9. வீல் ஸ்போக் மற்றும் ரிம்
10. ஃபூட் ரெஸ்ட்
11. மட் கார்டு
12. ஸ்டான்டு , சைட் ஸ்டான்டு
13. பைக்கில் எங்கேனும் துருபிடித்துள்ளதா ?

ஓட்டுதல் மூலம் கவனிக்க வேண்டியவை

1. பைக்கினை சோதனை செய்வதற்க்கு காலை நேரத்தினை தேர்ந்தெடுத்து சோதிக்கவும். முதலில் கிக் ஸ்டார்டில் சோதனை செய்து 2 கிக்யில் ஸ்டார் ஆகின்றதா ? என சோதிக்கவும். அடுத்த முறை செல்ஃப் ஸ்டார்ட் செய்தால் ஒரு முறையிலே ஸ்டார்ட் ஆகின்றதா ? என தோதியுங்கள்.
2.சஸ்பென்ஷன் அமைப்பில் மாற்றம் தெரிகின்றதா என்பதை அறிய குழிகள் நிறைந்த சாலயிலும் ஓட்டி பாருங்கள்
3. பிரேக் செயல்பாடு
4. கியர் மாற்றும் பொழுது சத்தம் ஏற்படுகின்றதா அல்லது சிறப்பாக உள்ளதா ?
5. பைக்கின் சத்தம்
6. ஸ்டீயரிங் வளைவுகளில் எப்படி உள்ளது
7. வாகனத்தின் கிரிப்

டாக்குமென்ட் சோதனை செய்வது எப்படி

1. ஆர்சி புத்தகத்தில் உள்ளதை போன்றே பைக்கின் அடிச்சட்ட எண் உள்ளதா
2. பைக்கின் மீது ஏதேனும் கடன் உள்ளதா ? என்பதனை கிராஸ் செக் செய்து கொள்ளுங்கள்.
3. என்ஜின் வரிசை எண் தோதனை செய்யுங்கள்
4. வாகனத்தின் உரிமையாளரின் விவரங்களை சரிபார்க்கவும்.

பைக் மெக்கானிக்கை அனுகவும்

மேலே தொகுக்கப்பட்டுள்ள பல குறிப்புகளை நீங்களே பரிசோதனை செய்து கொள்ளலாம். பைக் மெக்கானிக் உதவியுடன் அனுகி வாகனத்தை ஓட்டி பார்த்து சோதனை செய்து பார்க்க சொல்லுங்கள்.

மெக்கானிக்க அனுபவத்தில் வாகனத்தின் உண்மையான மதிப்பினை  அவர் உங்களுக்கு சொல்லி விடுவார்.

விலை

பைக்கின் விலையை அதன் பயன்பாடு மற்றும் வருடங்கள் போன்றவற்றை கொண்டும் அனுபவமுள்ள மெக்கானிக் உதவியுடன் பேரம் பேசுங்கள்…….

இந்த குறிப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா ?,…………….

Used Bike Buying checklist in Tamil

Exit mobile version