எந்த கலரில் கார் வாங்கலாம்

எந்த கலர் கார் வாங்கலாம் என்பதில் பலருக்கு சந்தேகம் எழும் சிலர் தங்கள் ராசிக்கு உண்டான கலர்களை தேர்வு செய்வர், சிலர் தங்கள் விருப்பமான வண்ணத்தினை தேர்வு செய்வர்.
உலகளவில் கார் வாங்கும் பலருக்கும் வண்ணத்தினை தேர்வு செய்வத் சற்று கடினமாகத்தான் இருக்கும். கார்கள் பல்வேறு விதமான வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகின்றது. 2012 ஆம் ஆண்டின் கணக்குப்படி எந்த வண்ணங்களில் கார்கள் அதிகம் இருக்கின்றது என்று பார்த்தால்..
வெள்ளை நிறத்தில் 22 %
சில்வர் கலர் 20 %
கருப்பு நிறத்தில் 19 %
கிரே நிறத்தில் 12 % 
சிகப்பு நிறத்தில் 9 %
இயற்கை நிறத்தில் 8 %
நீள நிறத்தில் 7 %
பச்சை கலரில் 2 %
மற்ற வண்ணங்களில் 1 % என உலகளவில் கார்களின் கலர்கள் இருப்பதாக அமெரிக்காவின் பிபிஜி இன்டஷ்ட்ரீஸ் நடத்தி ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும் கார் வண்ணங்களில் வெளிப்புறத்தின் கலருக்கு 77  சதவீதம் பேர் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கின்றார்களாம். இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ள மற்றொன்று குறைந்த விலை கார்கள் வாங்குபவர்களை விட சொகுசு கார்கள், எஸ்யூவி, ஸ்போர்ட்ஸ் கார் வாங்குபவர்களே  வண்ணத்திற்க்கு மிகுந்த முக்கியத்துவம் தருகின்றனராம்.
Regional details regarding PPG’s 2012 automotive color popularity data:
In North America, white ranks first (21 percent), followed by black (19 percent), silver and gray (16 percent each), red (10 percent), blue (8 percent), natural (7 percent) and green (3 percent).

In Europe, white is also most popular (23 percent), followed by black (21 percent), gray (17 percent), silver (13 percent), blue, natural and red (7 percent each), other colors (3 percent) and green (2 percent). 

In the Asia Pacific region, silver and white tied for most popular (23 percent each), followed by black (19 percent), natural (10 percent), red (9 percent), gray (8 percent), blue (7 percent) and green (1 percent).
முழுதாக வாசிக்க PPG ARTICLE COLOR
எந்த கலரில் கார் தேர்வு செய்யலாம்
உலகயளவில் பெரும்பாலான ஆட்டோமொபைல் வல்லுனர்கள் பரிந்துரைப்பது வெள்ளை மற்றும் வெளிர் நிற கார்களைத்தான். அதற்க்கு அடுத்தப்படியாக சில்வர் நிறம்தான்.
ஏன் வெள்ளை நிறத்தில் கார் வாங்க வேண்டும்
வெள்ளை நிற கார்கள் சற்று தொலைவில் இருந்து பார்க்கும்பொழுதும் மிக தெளிவாக தெரியும். இரவு நேரங்களில் கார் நன்றாக தெரியும் இதனால் மற்ற வாகன ஓட்டிகளும் வாகனத்தினை இயல்பாக கண்டுகொள்ள முடியும். மேலும் மிக அதிகப்படியான வெயில் நேரங்களிலும் வெள்ளை வண்ணம் வெயிலினை காரினுள் செல்லாமல் தடுக்கும்.
சில்வர் கலரும் தொலைவில் இருந்து பார்த்தாலும் இரவு நேரங்களிலும் நன்றாக இருக்கும் என்பதால் பாதுகாப்பாக இருக்கும்.
வெள்ளை நிறம் மிகவும் பாதுகாப்பான வண்ணமாக கருத்தப்படுகின்றது. கருப்பு வண்ணம் இரவு நேரங்களில் மிக குறைவான பாதுகாப்பினை கொண்டதாகும்.
வண்ணங்களை தேர்வு செய்யம்பொழுது கவனம் கொள்ளுங்கள். உங்கள் காரின் வண்ணங்களும் உங்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும்.
ஆட்டோமொபைல் பராமரிப்பு குறிப்புகள் பற்றி பலரின் விருப்பமான பகுதியாக இருந்து வருகின்றது. பலரும் அதிகப்படியான குறிப்புகள் வெளியிட வேண்டும் என கேட்டு வருகின்றனர்.
மேலும் பல டிப்ஸ்கள் வெளிவர நீங்களும் உதவலாம் நீங்கள் அறிந்த குறிப்புகளை மின்னஞ்சல் அனுப்புங்கள். அவை உங்கள் பெயரிலே வெளியிடப்படும்..
மின்னஞ்சல் முகவரி : tamilautmobile@gmail.com
Exit mobile version