Automobile Tamilan

பஜாஜ் ஆட்டோவின் புதிய ரிக்கி 3 சக்கர எலக்ட்ரிக் ரிக்‌ஷா வெளியானது

bajaj riki p4005

பஜாஜ் ஆட்டோவின் மூன்று சக்கர வாகனப் பிரிவில் கூடுதலாக புதிய ரிக்கி இ-ரிக்‌ஷா மாடல் சரக்கு மற்றும் பயணிகளுக்கான போக்குவரத்து என இரண்டிலும் ₹ 1,90,890 ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

ரிக்கி மாடல் மிக சிறப்பான பாதுகாப்பினை வழங்குவதுடன் நீண்ட ரேஞ்ச் வெளிப்படுத்தும் பேட்டரிகளை கொண்டிருப்பது இந்த சந்தையில் மிகப்பெரிய பலமாக இருக்கும் என பஜாஜ் ஆட்டோ நம்புகின்றது.

Bajaj Riki P40

பயணிகளுக்கான ரிக்கி P4005, P4006 என இரு மாடல்களை வெளியிட்டுள்ள நிலையில் 5.4 kWh மற்றும் 6.1kWh பேட்டரி என இரு ஆப்ஷனை பெற உள்ள நிலையில் ஆரம்ப நிலை மாடல் மணிக்கு அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிமீ வேகத்தை எட்டுவதுடன 149 கிமீ ரேஞ்ச் ஆனது ரிக்‌ஷா முறையிலும், e-Kart வகையில் 164 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

மோனோகாக் சேஸிஸ் பெற்றுள்ள நிலையில் 5 நபர்கள் பயணிக்கும் திறனுடன் டிஜிட்டல் டிஸ்பிளே கொண்டுள்ள நிலையில், இந்த மாடல் 3 மணி நேரம் 45 நிமிடங்களில் சார்ஜ் ஏறிவிடும் இதன் பவர் 1.99kw மற்றும் டார்க் 25Nm ஆகும். இந்த மாடல் வெள்ளை, பச்சை மற்றும் நீலம் என மூன்று நிறங்களில் கிடைக்க உள்ளது.

Bajaj Riki C40

ரூ.2.01 லட்சம் விலையில் கார்கோ வகைக்கு ஏற்ற புதிய ரிக்கி C4005 மாடல் பயணகளுக்கான வாகனத்தை போன்றே 5.4 kWh பேட்டரி பேக்கினை கொண்டு அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிமீ வேகத்தை எட்டுவதுடன 164 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடல் 3 மணி நேரம் 45 நிமிடங்களில் சார்ஜ் ஏறிவிடும் இதன் பவர் 1.99kw மற்றும் டார்க் 25Nm ஆகும். இந்த மாடல் வெள்ளை, பச்சை, கிரே மற்றும் நீலம் என நான்கு நிறங்களில் கிடைக்க உள்ளது.

ரிக்கி முதற்கட்டமாக உத்தரப்பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் அஸ்ஸாம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நகரங்களில் கிடைக்க உள்ள நிலையில் ஏற்கனவே, பாட்னா, மொராதாபாத், கவுகாத்தி மற்றும் ராய்ப்பூர் ஆகிய இடங்களில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version