இந்தியாவின் முதல் BS6 ரக ஐஷர் புரோ 2000 சீரிஸ் இலகுரக டிரக் அறிமுகம்

Eicher Pro 2049 truck

பாரத் ஸ்டேஜ் 6 அல்லது BS6 ரக என்ஜினை பெறும் முதல் ஐஷர் புரோ 2000 சீரிஸ் இலகுரக டிரக் மாடலை ஜஷர் டிரக் மற்றும் பஸ் இந்தியாவில் பல்வேறு நவீன அம்சங்களை உள்ளடக்கியதாக புதிதாக இரண்டு என்ஜின் தேர்வுகளில் வெளியிட்டுள்ளது.

Eicher Pro 2049 மற்றும் Eicher Pro 2095XP என இரு இலகுரக டிரக்குகளை தயாரிக்கவும், போபால் அருகே புதிய ஆலையை உருவாக்கவும் ரூ.800 கோடி முதலீட்டை ஐஷர் மேற்கொண்டது. ஆலைக்கு என ரூ.400 கோடியை ஒதுக்கியதுடன், மீதமுள்ள முதலீட்டை ஐஷர் ப்ரோ 2049 மற்றும் ஐஷர் ப்ரோ 2095எக்ஸ்பி டிரக்குகளை தயாரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஐஷர் புரோ 2000 சீரிஸ்

இந்தியாவில் பிஎஸ் 6 ரக மாசு கட்டுப்பாடு விதிகள் ஏப்ரல் 2020 முதல் செயற்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், பெரும்பாலான மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் பாரத் ஸ்டேஜ் 6 நடைமுறைக்கான வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

அந்த வரிசையில் வர்த்தக வாகன தயாரிப்பாளரான வால்வோ ஐஷர் வர்த்தக வாகன நிறுவனம், முதல் பிஎஸ் 6 ரக மாசு விதிகளுக்கு ஏற்ற இரு என்ஜின்களை அறிமுகப்படுத்தி இரு புதிய டிரக்குகளை வெளியிட்டுள்ளது.

ஐஷர் ப்ரோ 2000 சீரிஸ் டிரக்குகளில் 1.8 மீட்டர் மற்றும் 2.0 மீட்டர் நீளமுள்ள முன்புறம் சாய்க்கும் வகையிலான கேபின் வழங்கப்பட்டு, 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இன்ஃபோடெயின்மென்ட்  சிஸ்டம் மூலமாக யூஎஸ்பி, ஆக்ஸ் , ப்ளூடூத் ஆதரவு உள்ளிட்ட அம்சங்களுடன் டெலிமேட்டிக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகனத்தின் உரிமையாளர் இலகுவாக டிரக்கின் இருப்பிடம், எரிபொருள் சிக்கனம், அளவு  உள்ளிட்ட பல்வேறு விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

அடுத்தப்படியாக, ஐஷர் ப்ரோ 2049 மாடல் அதிகபட்சமாக 2.7 டன் பேலோடு தாங்கும் திறனுடனும், ஐஷர் ப்ரோ 2095XP மாடல் அதிகபட்சமாக 7.2 டன் தள்ளுசுமை தாங்குவதுடன் 14.1, 17.6, 19, 20 மற்றும் 21.5 அடி நீளமுள்ள 5 விதமான கார்கோ பாடிகளில் கிடைக்கும்.

ஐஷர் ப்ரோ 2049 டிரக்கின் மொத்த வாகன எடை 4995 கிலோ (GVW) பெற்று  E483 4 சிலிண்டர் 2V CRS என்ஜின் பொருத்தப்பட்டு 95 HP பவர் மற்றும் 300 Nm டார்க் வழங்கும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. Eicher Pro 2049  இலகுரக டிரக்கிற்கு 1 வருட வாரண்டி அல்லது வரம்பற்ற கிலோமீட்டர்கள், என்ஜின் மற்றும் கியர்பாக்சிற்கு 3 வருட வாரண்டி அல்லது வரம்பற்ற கிலோமீட்டர்கள் வழங்கப்படுகின்றது.

ஐஷர் ப்ரோ 2095XP டிரக்கின் மொத்த வாகன எடை 10,700 கிலோ (GVW) பெற்று  E494 4 சிலிண்டர் 2V CRS என்ஜின் பொருத்தப்பட்டு 115 HP பவர் மற்றும் 400 Nm டார்க் வழங்கும். இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. Eicher Pro 2095XP  இலகுரக டிரக்கிற்கு 3 வருட வாரண்டி அல்லது வரம்பற்ற கிலோமீட்டர்கள், என்ஜின் மற்றும் கியர்பாக்சிற்கு 4 வருட வாரண்டி அல்லது வரம்பற்ற கிலோமீட்டர்கள் வழங்கப்படுகின்றது.

ஐஷர் புரோ 2000 சீரிஸ் இலகுரக டிரக்குகள்கிந்த ஆண்டின் ஆகஸ்ட் அல்லது இறுதி மாதங்களுக்குள் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

 

Exit mobile version