Automobile Tamilan

ஆய்லரின் புதிய டர்போ EV 1000 எலக்ட்ரிக் 1 டன் டிரக்கின் சிறப்புகள்

Euler TurboEV 1000

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஆய்லர் மோட்டார்ஸ் எலக்ட்ரிக் வர்த்தக வாகன தயாரிப்பாளரின் புதிய டர்போ EV 1000 மாடல் 1 டன் சுமை எடுத்துச் செல்லும் திறனுடன் ரூ.5.99 லட்சம் முதல் ரூ. லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்டார்ட்அப் நிறுவனமான ஆய்லர் ஏற்கனவே ஹைலோடு EV மூன்று சக்கர டிரக், ஸ்ட்ரோம்EV மற்றும் நியோ எலக்ட்ரிக் ஆட்டோரிக்‌ஷா ஆகியவற்றை விற்பனை செய்துவரும் நிலையில் 60க்கு மேற்பட்ட நகரங்களில் 100க்கு மேற்பட்ட டீலர்களை கொண்டுள்ளது. மேலும், இந்நிறுவனத்தில் நாட்டின் முதன்மையான ஹீரோ மோட்டோகார்ப் முதலீடு செய்துள்ளது.

Euler TurboEV 1000

டர்போ இவி 1000 டிரக்கில் சுமை தாங்கும் திறன் 1000 கிலோ கிராம் ஆக உள்ள நிலையில் 8.3 அடி கார்கோ தொட்டியை பெற்றுள்ள இந்த டிரக்கில் சிட்டி, ஃபாஸ்ட் சார்ஜிங், மற்றும் மேக்ஸ் என மூன்று வேரியண்டு உள்ளது.

மாதந்தோறும் ₹10,000-ல் தொடங்கும் EMI திட்டங்களுடன், ₹49,999 முன்பணம் செலுத்தி வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றிலும் பொதுவாக மணிக்கு அதிகபட்ச வேகம் மணிக்கு 70 கிமீ ஆக உள்ள நிலையில் ரேஞ்ச் மற்றும் தண்டர் என இரு டிரைவிங் மோடுகளை கொண்டு முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக்குடன் பொதுவாக பல்வேறு மாறுபட்ட சுமைகளை எடுத்துச் செல்ல ஏற்ற வகையில் மாற்றிக் கொள்ளலாம்.

டாப் Turbo EV 1000 MAXX வேரியண்டில் டார்க் 140Nm வெளிப்படுத்துவதுடன் பவர் 30KW வெளிப்படுத்தும் மோட்டார் பொருத்தப்பட்டு 19.2 kwh பேட்டரி பெற்று 0-100% சார்ஜில் 267கிமீ ரேஞ்ச் சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் உண்மையான ரேஞ்ச் 180கிமீ வரை கிடைக்கலாம். சார்ஜிங் வேகத்தை பொறுத்தவரை 3kwh கொண்டு 100% பெற 5 முதல் 6 மணி நேரம் தேவைப்படும்.

Turbo EV 1000 FC வேரியண்டில் 16 kwh பேட்டரி பெற்று 0-100% சார்ஜில் 200கிமீ ரேஞ்ச் சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் உண்மையான ரேஞ்ச் 140கிமீ வரை வழங்கும் நிலையில் பவர் 20kw மற்றும் டார்க் 125Nm ஆக உள்ள நிலையில் சார்ஜிங் நேரம் CCS2 DC fast மூலமாக 4 முதல் 5 மணி நேரத்தில் சார்ஜ் செய்ய முடியும்.

Turbo EV 1000 City வேரியண்டில் 15 kwh பேட்டரி பெற்று 0-100% சார்ஜில் 197கிமீ ரேஞ்ச் சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் உண்மையான ரேஞ்ச் 135கிமீ வரை வழங்கும் நிலையில் பவர் 15kw மற்றும் டார்க் 125Nm ஆக உள்ள நிலையில் சார்ஜிங் நேரம் 3kwh கொண்டு 100% பெற 4 முதல் 5 மணி நேரம் தேவைப்படும்.

குறிப்பாக இந்த டர்போ இவி 1000 எலக்ட்ரிக் டிரக் விலை ரூ.6 லட்சத்திற்குள் அமைந்திருப்பதுடன் டீசல் டிரக்குகளுக்கு இணையான விலையில் குறைந்த பராமரிப்பு செலவு உள்ளிட்ட காரணங்களால் நல்ல வரவேற்பினை பெறக்கூடும், ஆனால் சார்ஜிங் உள்கட்டமைப்பு வலுவாக இருந்தால் மிகப்பெரிய பலமாக அமையும்.

Exit mobile version