Automobile Tamilan

மஹிந்திரா பொலிரோ மேக்ஸ் பிக்கப் சிஎன்ஜி விற்பனைக்கு வெளியானது

Bolero MaXX Pik-Up HD 1.9 CNG

இந்தியாவின் மிகவும் பிரசத்தி பெற்ற பிக்கப் மஹிந்திரா மாடலான 1.85 டன் பே லோடு கொண்டு 400கிமீ பயணிக்கும் திறனுடன் 180 லிட்டர் சிஎன்ஜி டேங்குடன் பொலிரோ மேக்ஸ் HD 1.9 சிஎன்ஜி விற்பனைக்கு ரூ.11.19 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

16 அங்குல டயருடன் லிஃப் ஸ்பீரிங் சஸ்பென்ஷனை கொண்டுள்ள இந்த பிக்கப் டிரக்கில் சுமை ஏற்றும் கார்கோ பாடியின் நீளம் 3050 mm ஆக அமைந்து பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்றதாகவும் அதிகப்படியாக 1850 கிலோ எடையை சுமந்து செல்லும் திறனுக்கு ஏற்ற 2.5 லிட்டர் டர்போசார்ஜ்டூ சிஎன்ஜி எஞ்சின் உள்ளது.

61 kW மற்றும் 1,200–2,200 rpm-ல் அதிகபட்சமாக 220 Nm டார்க்கை வழங்குகின்ற நிலையில், 5 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ள பொலிரோ மேக்ஸ் பிக்கப் ஹெச்டி 1.9 மாடலில் 180 லிட்டர் சிஎன்ஜி டேங்க் முழுவதாமாக நிரப்பினால் தோராயமாக 400 கிமீ தொலைவை கடக்கலாம் என மஹிந்திரா குறிப்பிட்டுள்ளது.

D+2 இருக்கை அமைப்பினை கொண்ட இந்த மாடலில் மேம்பட்ட iMAXX டெலிமேடிக்ஸ் தீர்வால் இயக்கப்படும் அதிநவீன இணைக்கப்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இந்த புதுமையான அமைப்பு நிகழ்நேர வாகன நுண்ணறிவுகளை வழங்குகிறது, அதிக செயல்பாட்டு திறன் மற்றும் சிறந்த ஃப்ளீட் நிர்வாகத்தை உறுதி செய்கிறது.

மேலும், ஓட்டுநர் வசதிக்கு முன்னுரிமை அளித்து, பிக்அப் டிரக்கில் ஏர் கண்டிஷனிங் மற்றும் வெப்பமாக்கல் அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.

Exit mobile version