Automobile Tamilan

மஹிந்திரா பிளேஸோ X m-டூரோ டிப்பர் டிரக் அறிமுகமானது

mahindra blazo x m-dura tipper

2023 எக்ஸ்கான் கண்காட்சியில் மஹிந்திரா டிரக் மற்றும் பஸ் நிறுவனத்தின் புதிய பிளேஸோ X m-டூரோ டிப்பர் வரிசையில் 28T GVW மற்றும் 35T GVW என இரண்டு டிரக்குகளை வெளியிட்டுள்ளது.

இதுதவிர மஹிந்திரா கட்டுமான வாகனங்கள் பிரிவில் CEV5 வரிசையில் உள்ள ரோட்மாஸ்டர் G100 மற்றும் எர்த்மாஸ்டர் SX பேக்ஹோ லோடர் ஆகியவற்றை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது.

Mahindra Blazo X M-Dura Tipper

மஹிந்திரா வெளியிட்டுள்ள பிளேஸோ X m-டூரோ டிரக்குகளில் பொருத்தப்பட்டுள்ள 7.2 லிட்டர் ஃப்யூவல் ஸ்மார்ட் டீசல் என்ஜின் அதிகபட்சமாக 1050 Nm டார்க்கை வெளிப்படுத்துவதுடன் 276 hp பவரை வழங்குகின்றது.

எக்ஸ்கான் கண்காட்சியில் பிளேஸோ X m-DURA 35 டிப்பர், BLAZO X 28 மிக்ஸர், ஃப்யூரியோ 10 Bowser 6KL மற்றும் லோடுகிங் ஆப்டிமா டிப்பர் ஆகியவற்றையும் காட்சிப்படுத்தியுள்ளது.

மஹிந்திரா CEV5 வரிசையில் வந்துள்ள சாலை கட்டுமானத்துக்கான ரோட்மாஸ்டர் G100 மோட்டார் கிரேடர் 102 HP பவரை வழங்குவதுடன் மற்றும் எர்த்மாஸ்டர் SX பேக்ஹோ லோடர் மேம்படுத்தப்பட்டு 74 HP பவரை வெளிப்படுத்துகின்றது. மஹிந்திரா லிஃப்ட்மாஸ்டர் காம்பாக்ட் கிரேன் ஒன்றை சுமை ஏற்றுதல் மற்றும் இழுத்துச் செல்லும் திறன் கொண்டதாக காட்சிப்படுத்தியுள்ளது.

மஹிந்திரா சாரதி அபியான், என்ற பெயரில் டிரக் டிரைவரின் மகள்களுக்கு உதவித்தொகை வழங்குதல் போன்ற திட்டங்கள் மூலம் வாடிக்கையாளர் நலனுக்கான அர்ப்பணிப்பை மஹிந்திரா வெளிப்படுத்தியது. MTBD நிறுவனம் விரிவாக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட சேவை நெட்வொர்க் மற்றும் 80 3S டீலர்ஷிப்கள் உட்பட, இந்தியாவின் முக்கிய டிரக்கிங் வழிகளில் விரிவான ஆதரவையும் வழங்குகின்றது.

Exit mobile version