Automobile Tamilan

ரூ.7.52 லட்சத்தில் மஹிந்திரா ‘ZEO’ எலெக்ட்ரிக் மினி டிரக் அறிமுகம்

mahindra zeo e truck

சிறிய ரக டிரக் சந்தையில் மஹிந்திரா வெளியிட்டுள்ள புதிய ‘ZEO’ எலெக்ட்ரிக் மினி டிரக் மாடலின் ஆரம்ப விலை ரூ.7.52 லட்சம் முதல் ரூ.7.99 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Flat Side Deck (FSD) மற்றும் Delivery Van (DV) என இருவகையில் கிடைக்கின்றது.

(எக்ஸ்-ஷோரூம்)

மஹிந்திராவின் ZEO டிரக்கில் இரண்டு விதமான லித்தியம் இரும்பு பாஸ்பேட் (LFP)  பேட்டரியைக் கொண்டு V1 வேரியண்ட் 18.4 kWh பேட்டரியுடன் அதே நேரத்தில் V2 மாடல்கள் 21.3 kWh திறன் கொண்டுள்ளது. இரண்டு மாடல்களும் அதிகபட்சமாக 30KW பவர், 114 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.

மணிக்கு 60 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் 32% அதிகபட்ச கிரேடபிலிட்டியுடன், நகர்ப்புற மற்றும் அரை நகர்ப்புற சாலை நிலைமைகளை எளிதாகக் கையாளும் வகையில் மஹிந்திரா ZEO வடிவமைக்கப்பட்டுள்ளது.

ZEO டிரக்கில் 160 கிமீ வரையிலான ரேஞ்ச் வழங்குகின்றது. ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் தொழில்நுட்பம் பெற்றிருப்பதுடன். DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் வெறும் 60 நிமிடங்களில் 100 கிமீ தூரத்தை வழங்குகிறது, இதில் 3.3 kW ஆன்போர்டு சார்ஜர் உள்ளது.

ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஒட்டுநருக்கான க்ரீப் செயல்பாடு போன்ற அம்சங்களுடன் ஈகோ மற்றும் பவர் ஆகிய இரண்டு விதமான டிரைவிங் மோடுகளை கொண்டுள்ளது.

அதிநவீன டிரைவர் உதவி அமைப்புக்கான (ADAS) செயல்பாட்டிற்கு AI ஆதரவை பெற்ற கேமரா, லேன் மாறுபாடு எச்சரிக்கை, பாதசாரிகள் மோதல் எச்சரிக்கை மற்றும் இயக்கி நடத்தை பகுப்பாய்வு போன்ற அம்சங்களை வழங்குகிறது. பேட்டரி மற்றும் மோட்டார் ஆகியவை நீர் மற்றும் தூசிப் பாதுகாப்பிற்கான IP67 தரநிலைகளை கொண்டதாக அமைந்துள்ளது.

Exit mobile version