Automobile Tamilan

மாருதி சுசூகி சூப்பர் கேரி டிரக்கில் ESP பாதுகாப்பு வசதி இணைப்பு.!

maruti suzuki super carry

மாருதி சுசூகியின் வர்த்தக பிரிவில் விற்பனை செய்யப்படுகின்ற சூப்பர் கேரி இலகுரக டிரக்கில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் மூலம் பாதுகாப்பு சார்ந்த மேம்பாடுகளை பெற்ற முதல் மினி டிரக் மாடலாக விளங்குகின்றது.

சூப்பர் கேரி டிரக்கில் இணைக்கப்பட்டுள்ள புதிய இஎஸ்பி மூலம் எஞ்சின் டிராக் கண்ட்ரோல் (EDC) யிலிருந்தும் பயனடைகிறது, இது திடீர் வேகக் குறைவின் போது நிலை தடுமாறுவதனை தடுக்க வடிவமைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இதனுடன் டிராக்‌ஷன் கட்டுப்பாடு, ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) உடன் இணைந்த எலக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் (EBD) மற்றும் ஹைட்ராலிக் பிரேக் அசிஸ்ட் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுகின்றது.

1.2-லிட்டர், 4-சிலிண்டர், K-சீரிஸ் எஞ்சின்  அதிகபட்சமாக 6000RPM-ல் 80.7 PS பவர் மற்றும் 2900RPM-ல் 104.4 Nm டார்க் பெட்ரோல் மாடலில் வழங்குகின்றது. அடுத்த உள்ள CNG வேரியண்டில், 6000rpm-ல் 71.6 ps பவர் மற்றும் 2800rpm-ல் 95 Nm டார்க் வழங்கும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.

(ex-showroom)

Exit mobile version