Site icon Automobile Tamilan

5900 மாருதி சுஸூகி சூப்பர் கேரி மினி டிரக்குகள் திரும்ப பெறப்படுகிறது

நாட்டின் முதன்மையான கார் தயாரிப்பாளரான மாருதி சுசூகி நிறுவனத்தின், எல்சிவி சந்தையில் வெளியிடப்பட்ட மாருதி சூப்பர் கேரி மினி டிரக்கில் ஃப்யூவல் ஃபில்ட்ரில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை சரி செய்வதற்காக திரும்ப அழைக்கப்படுகின்றது.

எல்சிவி சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற சூப்பர் கேரி மினி டிரக்கில் எரிபொருள் ஃபில்டரில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் சுமார் 5900 மினி டிரக்குகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. கடந்த 26 ஏப்ரல் 2018 முதல் 1 ஆகஸ்ட் 2018 வரை உற்பத்தி செய்யப்பட்ட மாடல்களில் இந்த பிரச்சனை உள்ளதாக கருதப்படுகின்றது.

எனவே, இந்த காலகட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மாடல்களில் ஏற்பட்டுள்ள ஃப்யூவல் ஃபில்ட்ர் பிரச்சனை சரி செய்ய அல்லது புதிதாக மாற்றித்தர மாருதி எவ்விதமான கட்டனமும் இல்லாமல் வழங்க உள்ளது. எனவே உங்கள் வாகனமும் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதனை அறிய மாருதி அதிகார்வப்பூர்வ இணையதளத்தில் சென்று உங்கள் வாகன சேஸ் (MA3 என தொடங்கும்) நெம்பரை கொண்டு அறிந்து கொள்ளலாம்.

இந்த சூப்பர் கேரி மினி டிரக்கில், 793cc ஆற்றலுடன் 2 சிலிண்டர் டீசல் இன்ஜின் கொடுன் 32BHP மற்றும் 75Nm டார்க்யூ மற்றும் 5-ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டுள்ளது. இது 740Kg வரையிலான லோடுகளை ஏற்றி செல்லும்.

Exit mobile version