Automobile Tamilan

டீசல் மூன்று சக்கர அபே சரக்கு ஆட்டோவை வெளியிட்ட பியாஜியோ

piaggio ape xtra bada cargo

இந்திய சந்தையில் பியாஜியோ நிறுவனம் அபே மினி மூன்று சக்கர சரக்கு ஆட்டோ வரிசையில் Apé Xtra Bada 700 மற்றும் Apé Xtra 600 என இரு டீசல் கார்கோ மாடல்களை முறையே ரூ.3.45 லட்சம் மற்றும் ரூ.2.88 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வெளியிட்டுள்ளது.

Piaggio Apé Xtra Bada 700 & Xtra 600

குறிப்பாக 4 சக்கர சரக்கு டிரக்குகளுக்கு மாற்றாக பட்ஜெட் விலையில் 750 கிலோ சுமை எடுத்துச் செல்லும் திறனுடன் 7அடி நீளமுள்ள தொட்டி பெற்றுள்ள முதல் மாடலாக இந்தியாவில் அபே எக்ஸ்ட்ரா படா 700 விளங்குகின்றது. இந்த மாடலில் 700 DI டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு, புதிய சேசிஸ், கேபின் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த வாகனத்தில் 12-இன்ச் ரேடியல் டயர்களுடன் மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் மற்றும் ரிவர்ஸ் எடுப்பதற்காக ஆப்ஷனலாக பின்புற சென்சார் ஆகியவை உள்ளது.

அடுத்து, இரண்டாவது மாடலாக வெளியிடப்பட்டுள்ள அபே எக்ஸ்ட்ரா 600 கார்கோ டிரக்கிலும் 600 DI டீசல் எஞ்சினுடன் மேம்பட்ட மைலேஜ், தரப்படுத்தல் மற்றும் அதிக சுமை சுமக்கும் செயல்திறனை வழங்குகிறது. இது நகரத்திற்குள் மற்றும் வளரும் நகர்ப்புறங்களுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

PVPL இன் நிர்வாக துணைத் தலைவர் அமித் சாகர், Apé Xtra Bada 700 தினசரி இயக்க செலவுகள் (Opex) மற்றும் மொத்த உரிமைக்கான செலவுகள் (TCO) காரணமாக 4 சக்கர சரக்கு வாகனங்களுக்கு மாற்றாக அதற்கு இணையான சுமை தாங்கும் திறனுடன் வழங்குகிறது என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version