Automobile Tamilan

புதிய டாடா ஏஸ் கோல்டு+ டீசல் டிரக்கிற்கு DEF ஆயில் தேவையில்லை.!

tata ace gold plus

ரூ.5.52 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ள டாடா மோட்டார்சின் புதிய ஏஸ் கோல்டு+ டீசல் டிரக்கில் புதிய LNT நுட்பத்தை கொண்டு வந்துள்ளதால் முந்தைய DEF முறைக்கு விடைகொடுக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய நன்மையை தரும் என்பதனால் வரவேற்பினை அதிகம் பெற வாய்ப்புள்ளது.

BS6 நடைமுறைக்கு வந்த பின்னர் ஏஸ் இலகுரக டிரக்கில் பயன்படுத்தப்பட்டு வந்த Diesel Exhaust Fluid (DEF) அல்லது ADBlue என குறிப்பிடும் முறையை பயன்படுத்தி வந்த டாடா தற்பொழுது இந்த முறைக்கு மாற்றாக நவீன Lean NOx Trap (LNT) மூலம் மாசு உமிழ்வை கட்டுப்படுத்துவதனால் பராமரிப்பு மற்றும் வாகனத்தை இயக்குவதற்கான செலவுகள் குறையும், இதனால் உரிமையாளர்கள் கூடுதல் இலாபம் ஈட்டமுடியும்.

2100 மிமீ வீல் பேஸ் பெற்று 160 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் கொண்டுள்ளது. 900 கிலோ சுமை தாங்கும் திறனுடன் வண்டியின் ஒட்டுமொத்த எடை GVW 1815 கிலோ கிராம் ஆக உள்ளது. ஏஸ் கோல்டு பிளஸ் டிரக்கில் 2 சிலிண்டர் 702cc டர்போசார்ஜ்டு இன்ட்ர்கூலர் டீசல் என்ஜின் அதிகபட்ச சக்தி POWER Modeல் 16.2 kW (22PS) @ 3600 rpm ; CITY Mode – 12.8 kW (17PS) @ 3600 rpm மற்றும் டார்க் ஆனது POWER Modeல் 55 Nm@ 2000 – 2600 rpm, CITY Mode-ல் 40 Nm@ 2000 – 2600 rpm  ஆக கொடுக்கப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸின் சிறிய வணிக வாகன போர்ட்ஃபோலியோவில் ஏஸ் ப்ரோ, ஏஸ், இன்ட்ரா மற்றும் யோதா மாடல்களும் உள்ளன, இவை 750 கிலோ முதல் 2 டன் வரை எடையுள்ள பிரிவுகளில் டீசல், பெட்ரோல், சிஎன்ஜி, இரு எரிபொருள் மற்றும் மின்சார பவர்டிரெய்ன்கள் உள்ளன.

Exit mobile version