Automobile Tamilan

ஏசி வசதியுடன் டாடா டிரக்குகள் விற்பனைக்கு அறிமுகமானது

tata trucks

டாடா மோட்டார்சின் வர்த்தக வாகணங்கள் பிரிவில் உள்ள கேபின் உள்ள SFC, LPT, அல்ட்ரா, சிக்னா மற்றும் பிரைமா டிரக்குகளிலும் மற்றும் கூடுதலாக பாடி கட்டப்படாத கவுல் வகைகளிலும் ஏசி வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

டாடா லாரிகளில் கொடுக்கப்பட்டுள்ள புதிய ஏர் கண்டிஷனிங் மூலம் ஈக்கோ மற்றும் ஹெவி என இரு முறைகளை பெற்று, மேம்பட்ட ஆற்றல் திறனுடன் உகந்த குளிர்ச்சியை வழங்குகிறது. டாடா மோட்டார்ஸின் கனரக லாரிகள், டிப்பர்கள் மற்றும் பிரைம் மூவர்ஸ் இப்போது 320hp வரை அதிக சக்தி வெளியீட்டை வழங்குகின்றன.

எரிபொருள் சிக்கனத்தை அதிகரிக்கும் வகையிலான தொழில்நுட்பத்துடன் இணைந்து, இந்த மேம்படுத்தல் லாரிகளை பல்வேறு பயன்பாடுகளுக்கு மிகவும் பொருத்தமானதாக ஆக்குகிறது. மேலும், பிற மேம்பாடுகளில் எஞ்சின் ஐடில் ஆட்டோ-ஷட், நிகழ்நேர எச்சரிக்கைகளுக்கான குரல் செய்தி அமைப்பு அடிப்படையிலான எரிபொருள் திறன் அம்சங்கள் அடங்கும்.

கருத்து தெரிவித்த டாடா மோட்டார்ஸ் வணிக வாகனங்கள், டிரக்குகள் துறையின் துணைத் தலைவரும் வணிகத் தலைவருமான திரு. ராஜேஷ் கவுல், ” ஏசஇ வசதி கொண்ட கேபின்கள் மற்றும் கவ்ல்களை அறிமுகப்படுத்துவது, ஓட்டுநர்களுக்கு வசதியான பணிச்சூழலை உருவாக்குவதற்கும், அதிக உற்பத்தித்திறனை எட்டுவதற்கு ஒழுங்குமுறை தேவைகளுக்கு இணங்குவதோடு மட்டுமல்லாமல், பல மேம்பாடுகளுடன் நீண்ட கால மதிப்பை வழங்க இந்த வாய்ப்பை நாங்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளோம்.

 

Exit mobile version