Automobile Tamilan

டாடா பிரைமா எலக்ட்ரிக் டிப்பர், எல்என்ஜி பிரைமா டிப்பர் அறிமுகம்

tata motors trucks

2023 எக்ஸ்கான் அரங்கில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பல்வேறு கட்டுமான பணிகளுக்கு ஏற்ற டிரக்குகளில் விற்பனைக்கு Prima 5528.S LNG மற்றும் Prima 3528.K LNG என இரு மாடல்களுடன் பிரைமா E.28 K எலக்ட்ரிக் டிப்பர் கான்செப்ட் காட்சிப்படுத்தியுள்ளது.

இதுதவிர, அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் 25kVA முதல் 125kVA வரையிலான டாடா ஜெனரேட்டர், கட்டுமான வாகனங்களுக்கான 55-138hp வரையிலான BS V என்ஜின்கள், லைவ் ஆக்சில்ஸ் மற்றும் டிரையிலர் ஆக்சில்ஸ் மற்றும் உதிரிபாகங்கள் காட்சிப்படுத்தியுள்ளது.

Tata Prima LNG Trucks

போக்குவரத்து வாகனங்களுக்கு ஏற்ற வகையில் குறைந்த அழுத்தம் கொண்ட திரவ இயற்கை எரிவாயு (Liquefied natural gasLNG) மூலம் இயங்கும் பிரைமா 5528.S LNG மற்றும் பிரைமா 3528.K LNG என இரண்டு டிப்பர்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிக சிறப்பான சிக்கனம் மற்றும் டார்க் வழங்குகின்றது.

இந்த வாகனங்கள் க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் டிராக்சன் கண்ட்ரோல் மற்றும் நியூமேட்டிகல் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிரைவர் சீட் போன்ற மேம்பட்ட அம்சங்களுடன் பொருத்தப்பட்டு அனைத்தும் ஆபரேட்டர்களுக்கான செயல்திறன் மற்றும் பாதுகாப்பு தரங்களை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

இது தொழில்துறையில் புதுமை மற்றும் பாதுகாப்பு தரங்களின் புதிய சகாப்தத்தை உருவாக்குவதாக டாடா மோட்டார்ஸ் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த அரங்கில் டாடா பிரைமா E.28K என்ற கான்செப்ட் எலக்ட்ரிக் டிப்பரும் காட்சிப்படுத்தியுள்ளது.  மாசு உமிழ்வு இல்லா வாகனங்களுக்கான தொழில்நுட்ப தீர்வுகளுக்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்புடன் ஒத்துப்போகிறது. 2045 ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய மாசு உமிழ்வை அடைய டாடா மோட்டார்ஸின் இலக்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

t

Exit mobile version