வர்த்தக வாகனங்கள் விலையை உயர்த்தும் டாடா மோட்டார்ஸ்

58fba tata prima truck

நாட்டின் மிகப்பெரிய வர்த்தக வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது வர்த்தக ரீதியான லாரி, பேருந்துகள் என அனைத்து வாகனங்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

அதிகரித்துவரும் உற்பத்தி மூலப் பொருட்களின் விலை காரணமாக இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் எவ்வளவு விலை உயர்த்தப்படும் என்பது பற்றி தற்போது அறிவிக்கவில்லை வரும் ஜனவரி 1 முதல் விலை உயர்வு அமலுக்கு வருவது உறுதியாகியுள்ளது.

டாடா மோட்டார்சின் வணிக வாகனங்களில் நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள், இலகுரக மற்றும் இடைநிலை வணிக லாரிகள் மற்றும் சிறிய வர்த்தக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் விற்பனையில் உள்ளன.

முன்பாக மஹிந்திரா மற்றும் இசுசூ என இரு வர்த்தக வாகன தயாரிப்பாளர்களும் விலை உயர்வை அறிவித்துள்ளனர்.

Exit mobile version