Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ரூ.3.25 லட்சத்தில் வேவ் இவா எலெக்ட்ரிக் காரின் முக்கிய சிறப்புகள்..!

by ராஜா
27 January 2025, 6:10 pm
in Car News
0
ShareTweetSend

vayve eva solar car

வேவ் மொபிலிட்டி (Vayve Mobility) ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் புதிய முயற்சியாக தயாரிக்கப்பட்டுள்ள இவா (EVA) எலெக்ட்ரிக் சோலார் ரூஃப் கொண்ட குவாட்ரிசைக்கிள் மாடலின் ஆரம்ப விலை ரூ.3.25 லட்சம் (BAAS) ஆக பேட்டரி வாடகை திட்டத்தில் துவங்குகின்ற நிலையில் மூன்று விதமான வேரியண்டில் கிடைக்கின்றது.

இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான வரவேற்பு அதிகரித்து வந்தாலும் இந்த சிறிய ரக காரின் தோற்றம் ஏற்கனவே சந்தையில் இருந்த ரேவா எலெக்ட்ரிக் மற்றும் தற்பொழுதுள்ள பஜாஜ் க்யூட் போன்றவற்றை நினைவுப்படுத்தினாலும், மாறுபட்ட முயற்சியாக மேற்கூறையில் சோலார் பேனல் கொடுத்திருப்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது.

 Vayve Eva

நகரங்களில் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசலில் இலகுவாக பயணிக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள Vayve Eva மாடலில் 4 சக்கரங்களை பெற்று 2 பெரியவர்கள் மற்றும் 1 சிறியவர் என மூன்று நபர்கள் மிக தாரளமாக அமர்ந்து செல்ல ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், முன்புறத்தில் ஒற்றை இருக்கை மத்தியில் ஸ்டீயரிங் வீல் என ஆட்டோ ரிக்ஷா போல அமைந்துள்ளது.

நோவா ஆரம்ப நிலை வேரியண்டில் 9 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு 12KW பவரை வெளிப்படுத்துகின்ற மாடலின் முழுமையான சிங்கிள் சார்ஜில் 125 கிமீ பயணிக்கும் திறனுடன் அதிகபட்ச வேகம் மணிக்கு 60 கிமீ ஆக உள்ளது. கூடுதலாக இந்த மாடலின் மேற்கூறையில் சோலார் ரூஃப் பொருத்துவதற்கு கட்டணமாக ரூ.20,000 வசூலிக்கப்படுகின்றது.

இரண்டாவது ஸ்டெல்லா வேரியண்டில் 12.6 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு 12KW பவரை வெளிப்படுத்துகின்ற மாடலின் முழுமையான சிங்கிள் சார்ஜில் 175 கிமீ பயணிக்கும் திறனுடன் ஈக்கோ மற்றும் சிட்டி என இரண்டு ரைடிங் மோடுகளுடன் அதிகபட்ச வேகம் மணிக்கு 60 கிமீ ஆக உள்ளது. கூடுதலாக இந்த மாடலின் மேற்கூறையில் சோலார் ரூஃப் பொருத்துவதற்கு கட்டணமாக ரூ.20,000 வசூலிக்கப்படுகின்றது. இந்த மாடலில் எல்இடி விளக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, வேகத்தை உணர்ந்து லாக் ஆகின்ற கதவுகள், சென்ட்ரல் லாக்கிங் போன்றவை உள்ளது.

இறுதியாக வேகா டாப் வேரியண்டில் 18 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு 15KW பவரை வெளிப்படுத்துகின்ற மாடலின் முழுமையான சிங்கிள் சார்ஜில் 250 கிமீ பயணிக்கும் திறனுடன் ஈக்கோ, சிட்டி, மற்றும் ஸ்போர்ட் என மூன்று ரைடிங் மோடுகளுடன் அதிகபட்ச வேகம் மணிக்கு 70 கிமீ ஆக உள்ளது. கூடுதலாக இந்த மாடலின் மேற்கூறையில் சோலார் ரூஃப் பொருத்துவதற்கு கட்டணமாக ரூ.25,000 வசூலிக்கப்படுகின்றது. இந்த மாடலில் ஏர்பேக், டயர் பிரஷர் மானிட்டர்,  எல்இடி விளக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, வேகத்தை உணர்ந்து லாக் ஆகின்ற கதவுகள், சென்ட்ரல் லாக்கிங் போன்றவை உள்ளது.

விரைவு சார்ஜர் வசதியை பெறுகின்ற டாப் வேரியண்டடை 10-70 % பெற 15 நிமிடங்கள் போதுமானதாகவும், மற்ற வகைகளில் சாதரன வீட்டு சார்ஜரில் 5 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக மேலே பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல் மூலம் ஆண்டு 3,000 கிமீ பயணம் மேற்கொள்ள முடியும் என இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது.

vayve eva dashboard

Vayve EVA Price list

BAAS எனப்படுகின்ற பேட்டரி வாடகை திட்டம் அல்லது முழுமையான கட்டணத்தை செலுத்தி வாங்கிக் கொள்ளும் வசதி என இரண்டு முறையின் விலை பட்டியல் அட்டவனையில் உள்ளது.

Vavye Eva prices (ex-showroom)
Variant முழுவிலை பேட்டரி சந்தா
Nova (9kWh) Rs 3.99 lakh Rs 3.25 lakh
Stella (12.6kWh) Rs 4.99 lakh Rs 3.99 lakh
Vega (18kWh) Rs 5.99 lakh Rs 4.49 lakh

பேட்டரி வாடகை திட்டத்தில் வாங்கும் பொழுது ஒரு கிமீ பேட்டரி சார்ஜிங் கட்டணம் ரூ. 2 ஆக வசூலிக்கப்பட உள்ளது. நோவா, ஸ்டெல்லா மற்றும் வேகா வகைகளுக்கு முறையே 600 கிமீ, 800 கிமீ மற்றும் 1200 கிமீ குறைந்தபட்ச ரேஞ்ச் திட்டத்தை இதன் மூலம் பெறலாம்.

டெலிவரி எப்பொழுது ?

வேவ் இவா இ-காருக்கான முன்பதிவு துவங்கப்பட்டாலும், டெலிவரி 2026 ஆம் ஆண்டு இறுதி அல்லது மத்தியில் மேற்கொள்ளப்பட உள்ளது. முன்பதிவு கட்டணம் ரூ. 5,000 வசூலிக்கப்படும் நிலையில், முதலில் பதிவு செய்யும் 25,000 வாடிக்கையாளர்களுக்கு 8 வருட நீட்டிக்கப்பட்ட பேட்டரி உத்தரவாதம் மற்றும் 3 வருட இலவச வாகன டேட்டா ஆகியவற்றை வழங்குகின்றது.

Related Motor News

No Content Available
Tags: Vayave EVA
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

hyundai venue n-line suv front

ஹூண்டாய் வென்யூ N-line எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

hyundai venue suv

ரூ.7.90 லட்சத்தில் 2026 ஹூண்டாய் Venue இந்தியாவில் அறிமுகம்

ஹோண்டா எலிவேட்டில் ADV எடிசனின் வசதிகள் மற்றும் விலை விவரம்

eVitara மூலம் எலக்ட்ரிக் சந்தையில் நுழையும் மாருதி சுசூகி

7 இருக்கை XEV 9S எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுக தேதியை வெளியிட்ட மஹிந்திரா

இந்தியாவில் 7 எஸ்யூவி உட்பட 10 கார்களை வெளியிட ஹோண்டா கார்ஸ் திட்டம்.!

சென்னை ஃபோர்டு ஆலையில் என்ஜின் உற்பத்திக்கு ரூ.3,250 கோடி முதலீடு

பெர்ஃபாமென்ஸ் ஹூண்டாய் வெனியூ N-Line எஸ்யூவி அறிமுகமானது

ஹோண்டா இந்தியாவில் வெளியிட உள்ள 0 α (Alpha) எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்

உலகின் ஆடம்பர கார்களில் மற்றொரு அடையாளம் ”டொயோட்டா செஞ்சூரி”

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan